நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

இரு சக்கர ஸ்கூட்டரில் சென்றபோது சக்கரத்தில் துப்பட்டா சிக்கி பெண் பலி: கேரளாவில் சோகம் 

கோழிக்கோடு: 

கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியில் சுதா எனும் பெண் இருசக்கரத்தில் செல்லும் போது இந்த விபரீத சம்பவம் அரங்கேறியது 

சுதா நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் வெளியே சென்று விட்டு தனது ஸ்கூட்டரில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார்.

புதுப்பாடி அருகே வந்தபோது அவரது கழுத்தில் அணிந்திருந்த துப்பட்டா ஸ்கூட்டரின் பின் சக்கரத்தில் சிக்கியது.

இதனால் அவர் கீழே விழுந்து பலத்த காயங்களுக்கு இலக்கானார். உடனே அவரை மீட்டு கோழிக்கோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். 

இருப்பினும், சுதா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset