நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

கும்பகர்ணனைப் போல உறக்கத்தில் உள்ளது ஒன்றிய அரசு: ராகுல்

புது டெல்லி:

அத்தியாவசியப் பொருள்கள் விலை உயர்வால் நாட்டு மக்கள் தவித்து வருகின்றனர். ஆனால் ஒன்றிய அரசு கும்பகர்ணனைப் போல உறக்கத்தில் உள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்தார்.

தில்லியில் உள்ள காய்கறி சந்தைக்கு சென்ற ராகுல் காந்தி, அங்கு குடும்பத் தலைவிகளுடன் உரையாடினார். இந்த விடியோவை சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு கூறியுள்ளதாவது:

விலைவாசி உயர்வு எந்த அளவுக்கு மக்களை பாதித்து வருகிறது என்பதை மக்களிடம் கேட்டு நேரடியாகத் தெரிந்து கொண்டேன். விலைவாசி உயர்வால் மக்கள் பொருள்களை வாங்கும் அளவு குறைவது சிறு வியாபாரிகளின் வாழ்வாதாரத்தையும் பாதித்து வருகிறது.

உணவு தொடர்பான தங்கள் குழந்தைகளின் சிறிய ஆசைகளைக் கூட மக்களால் நிறைவேற்றித் தர முடியாத நிலை உள்ளது. காய்கறி வாங்கும் அளவைக் குறைத்துக் கொண்டதாகவும், பழங்கள் வாங்குவதே இல்லை என்றும் குடும்பத் தலைவிகள் பலர் என்னிடம் தெரிவித்தனர்.

எளிய மக்களால் சரியாக சாப்பிடக் கூட முடியவில்லை என்றால் எப்படி அவர்கள் எதிர்காலத் தேவைகளுக்காக சேமிக்க முடியும்.

நாட்டில் ஒரு பக்கம் வேலையின்மையும், ஊதியம் உயராமல் இருப்பதும் மக்களுக்கு பெரும் பிரச்னையாக உள்ளது. மறுபுறம் விலைவாசி உயர்வு வாட்டி வதைக்கிறது. இதற்கு தீர்வுகாண முயலாமல் மத்திய அரசு கும்பகர்ணனைப் போல உறங்கி வருகிறது என்று ராகுல் கூறியுள்ளார்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset