நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

தேர்தல் நன்கொடையாக ரூ.2,604 பெற்றது பாஜக

புது டெல்லி: 

தேர்தல் நன்கொடையாக கடந்த 2023-24ஆம் ஆண்டில் பாஜக ரூ.2,604.74 கோடியும், காங்கிரஸ் ரூ. 281.38 கோடியும் பெற்றதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மக்களவைத் தேர்தலுக்கு பிறகு மார்ச் 31 வரை அரசியல் கட்சிகள் பெற்ற நன்கொடை குறித்த தரவுகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டது.

கடந்த 2019 மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக நன்கொடையாக பாஜக ரூ.740 கோடி பெற்றிருந்த நிலையில், தற்போது
 ரூ.281.38 கோடியை காங்கிரஸ் பெற்றுள்ளது.

ஆம் ஆத்மி ரூ.11.06 கோடியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ரூ.7.64 கோடியும் நன்கொடையாக பெற்றுள்ளன.

பியூச்சர் கேமிங் அண்ட் சர்வீசஸ் நிறுவனம் பல்வேறு கட்சிகளுக்கு தேர்தல் நிதி பத்திரங்கள் திட்டம் மூலம் அதிக நன்கொடையை வழங்கியுள்ளது.

அந்த வகையில், திரிணமூல் காங்கிரஸுக்கு ரூ.542 கோடி, திமுகவுக்கு ரூ.503 கோடி, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கு ரூ.154 கோடி நன்கொடை வழங்கியுள்ளது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset