நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

மலேசியா, ஆஸ்திரேலியாவில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட ஆடவன் இந்தியாவில் கைது

கோலாலம்பூர்:

மலேசியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக நம்பப்படும் ஆடவன் இந்தியாவில் கைது செய்யப்பட்டான்.

இந்தியாவின் போதைப்பொருள் கட்டுப்பாட்டு சிறப்பு குழு  ஜாஃபர் சாதிக் அப்துல் ரஹ்மானை டில்லியில் கைது செய்ததாக ஈடிவி பாரத் செய்தி இணையதளம் தெரிவித்துள்ளது.

மெத்தாம்பெட்டமைன் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் ரசாயனமான 50 கிலோகிராம் சூடோபெட்ரின் கைப்பற்றப்பட்டது தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரபல திரைப்பட பிரமுகர்களுடன் தொடர்புடைய ஜாஃபர், போதைப்பொருள் பணத்தில் சமீபத்திய தமிழ் திரைப்படமான மங்கையை தயாரித்ததாக ஒப்புக் கொண்டார்.

பாலிவுட்டுடன் ஜாஃபர் கொண்டிருந்த தொடர்புகளை ஏஜென்சி இப்போது ஆராய்ந்து வருகிறது என்று அச்சிறப்பு குழுவின் துணை இயக்குநர் ஞானேஷ்வர் சிங் கூறினார்.

2019ஆம் ஆண்டில், மும்பை சுங்கத்துறை அவரைக் கண்டுபிடித்த பிறகு ஜாஃபரின் பெயர் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டது.

ஜாஃபர் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்ததாகவும், போதைப்பொருள் பணத்தைப் பயன்படுத்தி சென்னையில் ஓட்டல் கட்டியதாகவும் ஞானேஷ்வர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset