நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

வீட்டு சிலிண்டர் ரூ.100 குறைத்த மோடி: தேர்தல் நாடகம்  என எதிர்க்கட்சிகள் விமர்சனம்

புது டெல்லி:

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி வீட்டில் உபயோகப்படுத்தும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ. 100 குறைக்கப்படுகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.

மக்களவைத் தேர்தல்  தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளநிலையில் பிரதமரின் இந்த அறிவிப்பு தேர்தல் நாடகம் என எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்துள்ளன.

சமையல் எரிவாயு சிலிண்டர் விலையைக் குறைப்பதன் மூலம், குடும்பங்களின் நலனைக் காக்கவும், ஆரோக்கியமான சூழலை உருவாக்கவும் முடியும். பெண்களுக்கு அதிகாரமளிக்க இந்தவிலை குறைப்பு  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது பிரதமர் தெரிவித்தார்.

தமிழகத்தில் ரூ.918க்கு விற்கப்பட்ட சிலிண்டர், ரூ.100 குறைக்கப்பட்டு ரூ.818க்கு விற்கப்படுகிறது.ம். தலைநகர் தில்லியில் ரூ. 903}லிருந்து ரூ. 803}ஆகக் குறைந்துள்ளது.

2014இல் பாஜக ஆட்சி பொறுப்பேற்றபோது சிலிண்டரின் விலை ரூ.417க இருந்தது. 23 மாதங்களாக பெட்ரோல், டீசல் விலை உச்சபட்சமாக உள்ளது, பெட்ரோல் ஒரு லிட்டர் சராசரியாக ரூ. 103.66க்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ. 95.27க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதுவும் விரைவில் குறைக்கப்படும் என்று தெரிகிறது.

மக்களவைத் தேர்தல் தேதி ஓரிரு நாள்களில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.100 குறைக்கப்பட்டிருப்பது தேர்தல் நாடகம்,மலிவான அரசியல் என்று காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் விமர்சனம் செய்துள்ளன.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset