நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

தொழுகையாளிகள் மீது பூட்ஸ் காலால் எட்டி மிதித்த தில்லி போலீஸ் அதிகாரி

புது டெல்லி: 

தில்லியில் சாலையோரத்தில் வெள்ளிக்கிழமை தொழுகையில் ஈடுபட்டிருந்த முஸ்லிம்கள் மீது பூட்ஸ் காலால் போலீஸ் அதிகாரி ஒருவர் எட்டி மிதித்த விடியோ வைரலானது. இதற்கு பல்வேறு தரப்பினரிடம் இருந்து கடும் கண்டனங்கள் வெளியானதையடுத்து, அந்த அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

தில்லியின் இந்தர்லோக் பகுதியில் உள்ள பள்ளிவாசலில் வெள்ளிக்கிழமை தொழுகையின்போது இடவசதி இல்லாததால் சாலையோரத்தில் சிலர் தொழுகையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது சப் இன்ஸ்பெக்டர் ஒருவர் ஒருவர் இஸ்லாமியர்களை காலால் எட்டி மிதித்து கலைந்து செல்லுமாறு தள்ளிக் கொண்டே முன்னேறி வந்தார்.

அப்போதும் இஸ்லாமியர்கள் தொடர்ந்து தொழுகையில் ஈடுபட்டிருந்தனர். மற்றவர்கள் சப் இன்ஸ்பெக்டரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தொழுகை முடிந்தவுடன் முஸ்லிம்கள் ஒன்று கூடி எதிர்ப்பு தெரிவித்ததால் அவர் அங்கிருந்து அவசரமாக தப்பிவிட்டார்.

இந்த சம்பவம் முழுவதும் விடியோவாக பதிவாகி சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

தொழுகையில் ஈடுபட்ட இஸ்லாமியர்களை காவலர் காலால் தாக்கியதைக் கண்டித்து, அப்பகுதியில் நூற்றுக்கணக்கானோர் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

காங்கிரஸ் கட்சி இந்த விடியோவை பதிவிட்டு வெட்கக்கேடான செயல் என்று தெரிவித்தது.

ஹிந்து  பக்தர்கள் மெட்ரோ ரயிலில் ஆடிபாடி கும்மாளமிடும் விடியோவை பதிவிட்டு இதுபோன்றா மக்களுக்கு இவர்கள் இடையூறு ஏற்படுத்தினார்கள் என்று கேள்விகளை நெட்டிசன்கள் எழுப்பினர்.

சம்பந்தப்பட்ட காவலர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர்கள் பதிவிட்டனர்.

இதையடுத்து காவலர் உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்படுவதாக தில்லி காவல் துறை அறிவித்தது.

வெறுப்புணர்வை தூண்டும் வகையில் நடந்து கொண்டு அந்தக் காவலரை பணியில் இருந்து முழுவதும் நீக்க வேண்டும் என்று இஸ்லாமிய அமைப்புகள் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கடிதம் எழுதியுள்ளன.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset