நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தொழில்நுட்பம்

By
|
பகிர்

மின்சார வாகனங்களால் காற்று மாசு அதிகம் - ஆய்வில் தகவல்

லண்டன்:

பெட்ரோல், டீசல், மின்சார கார்களின் காற்று மாசு குறித்து எமிஷன் அனலைடிக்ஸ் என்ற அமைப்பு ஆய்வு நடத்தியது.

ஆய்வு முடிவில் மின்சார கார்களில் அதிக காற்று மாசு ஏற்படுவது கண்டறியப்பட்டுள்ளது.

பெட்ரோல், டீசல், கார்களை விட மின்சார வாகனங்கள் அதிக காற்று மாசு துகள்களை வெளியிடுகிறது.

அதன் டயர்களில் பயன்படுத்தப்படும் ரப்பர் மற்றும் பேட்டரிகளிலிருந்து அதிக நச்சுக்கள் காற்றில் கலக்கின்றன.

அரை டன் பேட்டரி மின்சார வாகனத்திலிருந்து வெளியாகும் மாசு, பெட்ரோல் காரை விட 400 மடங்கு அதிகம் என்கிறது ஆய்வு.

மின்சார வாகனங்கள் காற்றுமாசைக் குறைக்கும் என்று பலர் நம்புகிறார்கள்.

ஆனால், பெட்ரோல், டீசல் வாகனங்களிலிருந்து வெளியேறும் காற்று மாசை விட, மின்சார வாகனங்களிலிருந்து தான் அதிக காற்று மாசு வெளியேறுகிறது என ஆய்வில் தெரியவந்துள்ளது.

உலக வெப்பமயமாதல் இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய பிரச்சினையாக உருவெடுத்திருக்கிறது.

எனவே, கரியமில வாயு வெளியேற்றத்தை குறைக்கவும், காற்று மாசைக் கட்டுப்படுத்தவும் உலக நாடுகள் தீவிரமாக முயற்சித்து வருகின்றன.

பெட்ரோல், டீசலில் இயங்கும் வாகனங்களுக்கு பதிலாக மின்சார வாகனங்கள் தற்போது உபயோகப்படுத்தப்படுகின்றன.

பெட்ரோல், டீசல் வாகனங்கள் அதிக மாசை வெளியேற்றுவதாக கூறி மின்சார வாகனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.

ஆனால், தற்போது வெளியான இந்த ஆய்வு முடிவால் வாகன ஓட்டிகள், நுகர்வோர்கள் கடும் குழப்பம் அடைந்து உள்ளனர்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset