நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

சவூதி புரோ லீக்: அல் நசர் அணி தோல்வி

ரியாத்:

சவூதி புரோ லீக் கிண்ண கால்பந்துப் போட்டியில் அல் நசர் அணியினர் தோல்வி கண்டு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளனர்.

அல் அவால் பார்க்கில் நடைபெற்ற ஆட்டத்தில் அல் நசர் அணியினர் அல் ரியாத் அணியை சந்தித்து விளையாடினர்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் அல் நசர் அணியினர் 1-3 என்ற கோல் கணக்கில் அல் ரியாத் அணியிடம் தோல்வி கண்டனர்.

பல முன்னணி ஆட்டக்காரர்கள் இருந்தும் அல் நசர் அணியினர் இவ்வாட்டத்தில் தோல்வி கண்டது அதன் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

மற்றொரு ஆட்டத்தில் டமாக் அணியினர் 1-0 என்ற கோல் கணக்கில் அல் வஹ்டா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset