நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

ஐரோப்பா லீக் கிண்ணம்: லிவர்பூல் வெற்றி

லண்டன்:

ஐரோப்பா லீக் கிண்ண கால்பந்துப் போட்டியில் லிவர்பூல் அணியினர் வெற்றி பெற்றனர்.

எதிக் அரேனாவில் நடந்த சுற்று 16ன் முதல் லீக் ஆட்டத்தில் லிவர்பூல் அணியினர் ஸ்பார்தா பராகுய் அணியை சந்தித்து விளையாடினர்.

இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய லிவர்பூல் அணியினர் 5-1 என்ற கோல் கணக்கில் ஸ்பார்தா பராகுய் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

லிவர்பூல் அணிக்காக டார்வின் நுனாஸ் இரு கோல்களை அடித்தார். மற்ற கோல்களை அலெக்சியஸ் மேக், லூயிஸ் டியாஸ், டோமினிக் ஆகியோர் அடித்தனர்.

மற்றொரு ஆட்டத்தில் ஏஎஸ் ரோமா அனியினர் 4-0 என்ற கோல் கணக்கில் பிரிக்டோன் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

மற்ற ஆட்டங்களில் ஏசி மிலான், மார்செலே, பிராபர்க் ஆகிய அணிகள் வெற்றி பெற்றன.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset