நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

ஐரோப்பிய சாம்பியன் லீக்: காலிறுதியில் மென்செஸ்டர் சிட்டி, ரியல்மாட்ரிட்

லண்டன்:

ஐரோப்பிய சாம்பியன் லீக் கிண்ண கால்பந்துப் போட்டியின் காலிறுதி சுற்றுக்கு மென்செஸ்டர் சிட்டி, ரியல்மாட்ரிட் ஆகிய அணிகள் முன்னேறின.

எதிஹாட் அரங்கில் நடைபெற்ற சுற்று 16ன் இரண்டாவது ஆட்டத்தில் மென்செஸ்டர் சிட்டி அணியினர் கோப்பன்ஹேகன் அணியை சந்தித்து விளையாடினர்.

இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய மென்செஸ்டர் சிட்டி அணியினர் 3-1 என்ற கோல் கணக்கில் கோப்பன்ஹேகன் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

மென்செஸ்டர் சிட்டி அணியின் வெற்றி கோல்களை மேனுவல் அகான்சி, ஜூலியன் அல்வாரேஸ், எர்லிங் ஹாலண்ட் ஆகியோர் அடித்தனர்.

இரு ஆட்டங்களின் முடிவில் 6-2 என்ற மொத்த கோல் கணக்கில் வெற்றி பெற்ற மென்செஸ்டர் சிட்டி அணியினர் அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.

மற்றொரு ஆட்டத்தில் ரியல்மாட்ரிட் அணியினர் 2-1 என்ற மொத்த கோல் கணக்கில் ஆர்பி லெஸ்பிக் அணியை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset