
செய்திகள் தொழில்நுட்பம்
உலகம் முழுவதும் திடீரென முடங்கிய பேஸ்புக், இன்ஸ்டாகிராம்: பயனர்கள் தவிப்பு
வாஷிங்டன்:
உலகெங்கும் அதிகாரப்பூர்வ அறிவிப்போ, முன்னெச்சரிக்கையோ எதுவுமின்றி பேஸ்புக், இன்ஸ்டாகிராம் திடீரென்று நேற்று இரவு முடங்கியது.
பேஸ்புக், இன்ஸ்டாகிராமில், கணக்குகள் தானாகவே லாக் அவுட் ஆனதால் பயனாளர்கள் குழப்பத்தின் உச்சத்திற்கு சென்றனர்.
இது தொடர்பாக கூடுதல் விவரம் அறியவும், புலம்புவதற்கும், ஏராளமான பயனாளர்கள் எலான் மஸ்கின் எக்ஸ் பக்கத்தில் குவிந்தனர்.
அவர்களை வரவேற்ற எலான் மஸ்க், தற்போது அனைவரும் ஏன் இங்கே கூடியிருக்கிறீர்கள் என தெரியும் என்று பதிவிட்டார்.
மேலும் இப்பதிவை உங்களால் படிக்க முடிகிறது என்றால், தங்கள் செர்வர் நன்றாக வேலை செய்கிறது என்று அர்த்தம் என்றும் நக்கல் அடித்தார்.
பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமை கலாய்த்து பயனாளர்களும் ஏராளமான மீம்ஸ் மற்றும் வீடியோக்களை எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டனர்.
பேஸ்புக்கை விட ரீல்ஸ்கள் நிறைந்த இன்ஸ்டா முடங்கியது பலரையும் ஏமாற்றம் அடைய வைத்தது.
பேஸ்புக், இன்ஸ்டா மட்டுமின்றி, பல்வேறு நாடுகளில் வாட்ஸ் ஆப் செயலியும் சற்று தடுமாறியது.
இந்நிலையில், தொழில்நுட்ப கோளாறை ஒப்புக் கொண்ட மெட்டா நிறுவனத்தின் தலைமை இயக்குநர் மார்க் ஜூக்கர் பெர்க், சிறிது நேரத்தில் எல்லாம் சரியாகி விடும் என்று கூறினார்.
தகவல் தொழில்நுட்ப சாதனங்களில் இருந்து சற்று விலகி பெற்றோரிடம் அன்பை வெளிப்படுத்துங்கள் என்ற அட்வைஸையும் மார்க் வழங்கினார்.
சுமார் ஒரு மணிநேரத்திற்கு பிறகு, பேஸ்புக், இன்ஸ்டா இயல்பு நிலைக்கு திரும்பியது.
சிரமத்திற்கு மன்னிப்பு கோரிய மெட்டோ நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் ஆண்டி ஸ்டோன், பேஸ்புக், இன்ஸ்டாவில் ஏற்பட்ட பிரச்சினை சரி செய்யப்பட்டதாக கூறினார்.
-பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 3, 2025, 4:36 pm
மீண்டும் 9000 ஊழியர்களை மைக்ரோசாப்ட் நிறுவனம் பணியிலிருந்து நீக்கியது
July 2, 2025, 11:43 am
துபாயில் அடுத்த ஆண்டு பறக்கும் டாக்சி சேவை அறிமுகப்படுத்தப்படலாம்
June 27, 2025, 8:31 pm
சர்வதேச விண்வெளி நிலையத்தை கால் பதித்த முதல் இந்தியர்
June 26, 2025, 8:07 pm
சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்தை இன்று சென்றடைகிறது டிராகன் விண்கலம்
June 25, 2025, 4:03 pm
ஆக்சியம் 4 திட்டம்: இந்திய வீரர் சுபான்ஷு சுக்லாவுடன் விண்ணில் பாய்ந்தது டிராகன் விண்கலம்
June 22, 2025, 11:29 am
160 கோடி சமூக வலைதள கணக்குகளின் தகவல்கள் திருடப்பட்டுவிட்டன: கடவுச்சொல்லை மாற்ற அறிவுறுத்தல்
June 16, 2025, 12:22 pm
Googleஇல் தேடல் முடிவுகளை இனி உரையாடலாகக் கேட்கலாம்: புதிய தொழில்நுட்பம்
June 13, 2025, 7:24 pm
விமானங்களின் பைலட்கள் பயன்படுத்தி வரும் இரகசிய வார்த்தைகள்
June 11, 2025, 11:04 am
திரவ ஆக்சிஜன் கசிவால் ஆக்சியம்-4 விண்வெளிப் பயணம் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது
June 10, 2025, 10:01 am