நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

ஐரோப்பிய சாம்பியன் லீக்: பாயர்ன் முனிச், பிஎஸ்ஜி முன்னேற்றம்

முனிச்:

ஐரோப்பிய சாம்பியன் லீக் கிண்ண கால்பந்துப் போட்டியின் காலிறுதி சுற்றுக்கு பாயர்ன் முனிச், பிஎஸ்ஜி அணிகள் முன்னேறி உள்ளன.

அலையன்ஸ் அரங்கில் நடைபெற்ற சுற்று 16இன் இரண்டாவது ஆட்டத்தில் பாயர்ன் முனிச் அணியினர் லசியோ அணியை சந்தித்து விளையாடினர்.

இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பாயர்ன் முனிச் அணியினர் 3-0 என்ற கோல் கணக்கில் லசியோ அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

பாயர்ன் முனிச் அணிக்காக ஹாரி கேய்ன் இரு கோல்களை அடித்தார். மற்றொரு கோலை தோமஸ் முல்லர் அடித்தார்.

இரு ஆட்டங்களின் முடிவில் 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற பாயர்ன் முனிச் அணியினர் அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.

மற்றொரு ஆட்டத்தில் பிஎஸ்ஜி அணியினர்  4-1 என்ற மொத்த கோல் கணக்கில் ரியால் சோஷிடாட் அணியை வீழ்த்தி வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset