
செய்திகள் வணிகம்
உலகப் பணக்காரர்களின் பட்டியலில் முதல் இடத்தை இழந்தார் எலான் மஸ்க்
நியூ யார்க்:
உலகப் பணக்காரர்களின் பட்டியலில் முதல் இடத்தைத் தற்காத்துக் கொள்ள டெஸ்லா நிறுவனரும், தலைவருமான எலான் மஸ்க் தோல்வியடைந்துள்ளார்.
நேற்று பங்குச் சந்தையில் டெஸ்லா நிறுவனத்தின் பங்கு பங்கு 7.2 சதவீதம் சரிவைச் சந்தித்த நிலையில் அவரின் நிகரச் சொந்த மதிப்பு 197.7 பில்லியன் அமெரிக்கா டாலராகக் குறைந்துள்ளது.
இதனால் அமேசான் நிறுவனர் பெசோஸ் 200.3 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து மதிப்புடன் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
60 வயதாகும் பெசோஸ் ப்ளூம்பெர்க்கின் தரவரிசையில் முதன்முறையாக உலகப் பணக்காரர்களின் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்துள்ளார்.
எலான் மஸ்க் - பெசோஸ் இடையிலான சொத்து மதிப்பு வித்தியாசம் 142 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது.
2022-ஆம் ஆண்டிலிருந்து அமேசானின் பங்குகள் இரண்டு மடங்கு அதிகரித்தது.
டெஸ்லாவின் பங்கு 2021-ல் அதன் உச்சத்திலிருந்து சுமார் 50 சதவீதம் அளவிற்கு குறைந்ததாகக் கூறப்படுகிறது.
இந்தப் பங்கு சந்தையின் விளைவு காரணமாக அமேசான் டாம் காம் நிறுவனர் பெசோஸ் தற்போது முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
ஷாங்காயிலிருந்து ஏற்றுமதியாகும் டெஸ்லா காரின் எண்ணிக்கை கடந்த ஓராண்டாகக் குறைந்து வந்த காரணத்தால் பங்கு சந்தையில் சரிவைக் கண்டுள்ளது.
அதேவேளையில் கொரோனா தொடங்கிய காலத்திலிருந்து ஆன்லைன் விற்பனையில் அபரித வளர்ச்சியை பெற்றுள்ளது.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
March 22, 2025, 4:05 pm
அமெரிக்காவில் ஐந்து மலேசியர்கள் 214 மில்லியன் அமெரிக்க டாலர் மோசடியில் சிக்கினர்
March 21, 2025, 12:53 pm
66 மணி நேரத்திற்கு இடைவிடாது காயா ராயா பெருநாள் சந்தை அதிகாரப்பூர்வமாக தொடங்கியது
March 11, 2025, 9:42 am
அமெரிக்கப் பங்கு விலைகள் கடுமையாக சரிந்தன
March 8, 2025, 4:54 pm
புதிய ரேஞ்ச் ரோவருக்கு இலங்கையில் அதிக டிமான்ட்
March 4, 2025, 2:48 pm
அமெரிக்காவிலிருந்து இறக்குமதியாகும் பொருள்கள் மீது கூடுதலாக 15% வரி: சீனா அறிவிப்பு
February 20, 2025, 5:14 pm
மலிவு விலையில் iPhone 16e
February 13, 2025, 10:48 pm