நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நாட்டின் 530ஆவது தமிழ்ப்பள்ளியான சுங்கை சிப்புட் ஹீவூட் பள்ளி மார்ச் 11ல் செயல்பட தொடங்கும்

சுங்கை சிப்புட்:

நாட்டின் 530ஆவது தமிழ்ப்பள்ளியான சுங்கை சிப்புட் ஹீவூட் பள்ளி மார்ச் 11ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக செயல்படத் தொடங்கும் என்று அப் பள்ளியின் நடவடிக்கைக் குழுத் தலைவத் சொ. தியாகராஜன் கூறினார்.

பேரா மாநிலத்தின் 135ஆவது தமிழ்ப்பள்ளியாக விளங்கும் இப்பள்ளி கடந்த 2012ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் அறிவித்த பள்ளிகளில் இதுவும் ஒன்றாகும்.

இப் பள்ளியின் கட்டுமானப் பணிகள் அனைத்தும் முழுமையாக நிறைவு பெற்ற்றுள்ளன.

தற்போது அப் பள்ளியின் சாவியை கல்வியமைச்சின் மேம்பாட்டுப் பிரிவுச் செயலாளர் டத்தோ மஸ்யாத்தி அபாங் இப்ராஹிமிடம் குத்தகையாளர் விவேகானந்தன் ஒப்படைத்தார்.

May be an image of 12 people

பின் பள்ளியின் சாவி தலைமையாசிரியர் தி. பொன்மணியிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இப் பள்ளி வரும் மார்ச் 11ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக செயல்படத் தொடங்கும் என்று தியாகராஜன் கூறினார்.

இப் பள்ளி 6 ஏக்கர் நிலத்தில் 12 வகுப்பறைகளுடன் சிறப்பாக கட்டப்பட்டுள்ளது.

குறிப்பாக பேரா மாநிலத்தில் நவீன வசதிகளைக் கொண்ட பெரிய பள்ளிகளில் ஒன்றாக சுங்கை சிப்புட் ஹீவூட் தமிழ்ப்பள்ளி விளங்குகிறது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset