நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் வணிகம்

By
|
பகிர்

இந்திய செயலிகளை நீக்கி பின்னர் சேர்த்தது GOOGPLE PLAY STORE

புது டெல்லி:

கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து முன்னணி இந்திய செயலிகள் நீக்கப்பட்டு பின்னர் சேர்க்கப்பட்டன.

நவுக்கிரி, 99 ஏக்கர்ஸ், ஷாதி மேட்ரிமோனி.டாம், பாரத் மேட்ரிமோனி, ஆடியோ தளமான குக்கு எஃப்எம் உள்ளிட்ட செயலிகள் திடீர் நீக்கப்பட்டன.

பிளே ஸ்டோர் மூலம் பயனடைந்த 10 நிறுவனங்கள், அதற்கான கட்டணத்தைச் செலுத்தாததால், அந்த நிறுவனங்களின் செயலிகள் நீக்கியதாக கூகுள் நிறுவனம் தெரிவித்தது.
இந்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்,  இந்திய பொருளாதாரத்துக்கு ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் சூழலை கருத்தில் கொள்ளாமல் அதன் விதியை எந்தவொரு பெரிய தொழில்நுட்ப நிறுவனமும் முடிவு செய்ய அனுமதிக்க முடியாது.

பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்ட செயலிகளை உருவாக்கியவர்களின் கூட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்தார்.

பின்னர் நீக்கப்பட்ட ஷாதி, நௌக்ரி, 99 ஏக்கர் உள்ளிட்ட செயலிகளை பிளே ஸ்டோரில் கூகுள் சனிக்கிழமை அனுமதித்தது. பிளே ஸ்டோர் கட்டண கொள்கைகளுக்கு உட்பட்டு அந்தச் செயலிகள் மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளன என்றும் தகவல்கள் தெரிவித்தன.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset