நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் வணிகம்

By
|
பகிர்

அரசாங்க உதவித் திட்டங்கள் 70 சதவீதம் ஹலால் பொருட்களாக இருக்க வேண்டும்: அமீர் அலி மைடின்

கோலாலம்பூர்:

அதிகாரப்பூர்வ அரசாங்க உதவித் திட்டங்களுக்காக வாங்கப்படும் பொருட்களில் 70% பூமிபுத்ராவுக்குச் சொந்தமான ஹலால் தயாரிப்புகளாக இருக்க வேண்டும்.

இது பூமிபுத்ராவிற்கு சொந்தமான வணிகங்களுக்கு உதவும் என்று 
மைடின் பேரங்காடியின் உரிமையாளர் டத்தோ வீரா அமீர் அலி கூறினார்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நிலவரப்படி, மொத்த ஹலால் சான்றிதழ் 9,162 நிறுவனங்களில் 38.7% அல்லது 3,562 நிறுவனங்கள் பூமிபுத்ராகளுக்கு சொந்தமானவை.

ஆனால் இந்த வணிகங்கள் அனைத்தும் ஹலால் சான்றிதழ் தேவைகளைப் பூர்த்தி செய்யாத வீடுகளில் இருந்து இயங்குகின்றன.

அத்தகைய வணிக உரிமையாளர்கள் தங்கள் அன்றாட வணிக நடவடிக்கைகளைத் தக்கவைக்க சுய நிதியை அதிகம் நம்பியுள்ளனர். 

பூமிபுத்ரா பொருட்கள் அதிகாரப்பூர்வ அரசு உதவித் திட்டங்களுக்கு முதல் தேர்வாக இருப்பதை நாம் ஒரு கொள்கையாக மாற்ற வேண்டும்.

இதன் மூலம் பூமிபுத்ரா வணிகர்கள் பயன்பெறுவார்கள் அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset