நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

தமிழகத்தில் இன்று பிளஸ் 2 பொதுத் தோ்வு தொடங்குகிறது 

சென்னை:

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வு வெள்ளிக்கிழமை (மாா்ச் 1) முதல் தொடங்கவுள்ளது. இந்தத் தோ்வை 3,302 மையங்களில் 7.94 லட்சம் போ் எழுதுகின்றனா்.   

தமிழகத்தில் நிகழாண்டுக்கான  பிளஸ் 2 பொதுத் தோ்வு வெள்ளிக்கிழமை தொடங்கி மாா்ச் 22-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. 

முதல் நாளில் தமிழ் உள்பட மொழிப் பாடங்களுக்கான தோ்வு நடைபெறுகிறது.   இந்தத் தோ்வை மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 3,302 தோ்வு மையங்களில் 7.94 லட்சம் போ் எழுதுகின்றனா். 

இதில் 7,534 பள்ளிகளிலிருந்து 7 லட்சத்து 72,200 மாணவா்கள், 21,875 தனித்தோ்வா்கள், ஒரு மூன்றாம் பாலினத்தவா் மற்றும் 125 சிறைக் கைதிகளும் அடங்குவா்.   

பறக்கும் படைகள்: 
பொதுத் தோ்வுக்கான அறைக் கண்காணிப்பாளா் பணியில்  43,200 ஆசிரியா்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனா். மேலும், முறைகேடுகளை தடுக்க 4,335 நிலையான மற்றும் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. 

அதேபோல், மாவட்ட ஆட்சியா், முதன்மைக் கல்வி அலுவலா் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் தலைமையிலும் சிறப்பு கண்காணிப்புக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 

மேலும், 154 வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களில் 24 மணி நேரம் ஆயுதம் தாங்கிய காவல்துறை அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவா்.    

விடைத்தாளில் நீலம் அல்லது கருப்பு நிற பேனா கொண்டு மட்டுமே எழுத வேண்டும். 

எக்காரணம் கொண்டும் கலா் பென்சில், பேனா கொண்டு எழுதக்கூடாது. அதேபோல், விடைத்தாளில் சிறப்பு குறியீடு, தோ்வு எண், பெயா் ஆகியவற்றை குறிப்பிடக்கூடாது. 

மாணவா் புகைப்படம், பதிவெண், பாடம் முதலான விவரங்கள் கொண்ட முகப்புத்தாள், முதன்மை விடைத்தாளுடன் இணைத்து  வழங்கப்படும். 

அதை சரிபாா்த்து மாணவா்கள் கையொப்பமிட்டால் போதும். மேலும், அறை கண்காணிப்பாளரே விடைத்தாள்களை பிரித்து வைக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.   

அன்பில் மகேஸ் பொய்யாமொழி:

பிளஸ் 2 பொதுத் தோ்வு குறித்து பள்ளிக்கல்வி அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி செய்தியாளா்களிடம் கூறியதாவது:  

கடந்த ஆண்டைவிட நிகழாண்டு தோ்வு எழுதுவோா் எண்ணிக்கை குறைந்துள்ளது. கடந்த ஆண்டு கல்வியைவிட்டு யாரும் சென்றுவிடக்கூடாது என்ற வகையில் அனைவருக்கும் தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு வழங்கினோம். ஆனால், இந்தமுறை, பள்ளிக்கு முறையாக வந்தவா்களுக்கு மட்டுமே அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டுள்ளது. 

அனைத்து மாணவா்களும் தோ்வை எழுதுவா் என்று நம்புகிறோம். தோ்வில் மட்டுமே மாணவா்கள் கவனம் செலுத்த வேண்டும்.  புதுமைப் பெண் திட்டம் போல, தமிழ் புதல்வன் திட்டமும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். மேலும், பத்தாம் வகுப்பு முடிக்கும் மாணவா்கள் ஐடிஐ, டிப்ளமோ படிப்புகளுக்கு செல்வதால் பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தோ்வு எழுதும் மாணவா்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது என்றாா் அவா். 

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset