நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

அலெக்ஸி நவால்னியின் இறுதிச்சடங்கு மார்ச் 1ஆம் தேதி நடைபெறும் 

மாஸ்கோ: 

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினையும் அவரது அரசாங்க கொள்கைகளையும் கடுமையாக விமர்சனம் செய்து வந்த முன்னாள் எதிர்கட்சி தலைவர் அலெக்ஸி நவால்னி சிறையில் அடைக்கப்பட்டார். 

இதனிடையே, பயங்கரவாதத்தை ஊக்குவித்தல், நீதிமன்ற அவமதிப்பு ஆகிய குற்றங்களுக்காக அலெக்ஸி நவால்னிக்கு மொத்தம் 19 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. 

கடந்த 2021ஆம் ஆண்டு முதல் அலெக்ஸி சிறை தண்டனையை அனுபவித்து வந்தார். அலெக்ஸி நவால்னி திடீரென்று சிறையில் உயிரிழந்ததாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 

இதனால், அவரின் இறுதிச்சடங்கு எதிர்வரும் மார்ச் 1ஆம் தேதி வெள்ளிக்கிழமை மரியினோ மாவட்டத்தில் உள்ள தேவாலயத்தில் நடைபெறும் என்று நவால்னியின் செய்தி தொடர்பாளர் கிரா யார்மிஷ் தெரிவித்தார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset