
செய்திகள் தொழில்நுட்பம்
ரூ.100இல் கேன்சர் தடுப்பு மாத்திரை: டாடா ஆய்வு நிறுவனம் சாதனை
மும்பை:
மும்பையில் உள்ள டாடா புற்றுநோய் ஆராய்ச்சி, சிகிச்சை நிறுவனம் புற்றுநோய் மீண்டும் தாக்குவதைத் தடுக்க ரூ.100 இல் மாத்திரையை கண்டுபிடித்துள்ளதாக அறிவித்துள்ளது.
10 ஆண்டுகள் ஆய்வு செய்து கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த மருந்து மனிதர்களின் சோதனைக்கு உள்படுத்தப்பட உள்ளது.
இது வெற்றி பெற்றுவிட்டால், கோடிகளில் செலவாகும் கேன்சர் நோய்க்கு ரூ.100இல் தடுப்பு சிகிச்சைப் பெற்றுவிடலாம்.
முதல் முறை கேன்சர் பாதிப்பை எதிர்கொண்ட ஒருவருக்கு மீண்டும் கேன்சர் வர வாய்ப்புகள் உள்ளது.
ஆகையால், முதல் முறை கேன்சர் பாதிப்பிற்குச் சிகிச்சை பெற்ற ஒருவருக்கு 2வது முறை கேன்சர் வருவதைத் தடுக்கும் மருத்தை மாத்திரை வடிவில் டாடா இன்ஸ்டிடியூட் கண்டுபிடித்துள்ளது.
இதனால் கதிர்வீச்சுச் சிகிச்சை மற்றும் மருந்து சிகிச்சை போன்ற சிகிச்சைகளின் பக்கவிளைவுகளை 50 சதவீதம் வரை குறைக்கும் திறன் கொண்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து டாடா நினைவு மருத்துவமனையின் மூத்த புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் ராஜேந்திர பத்வே கூறுகையில், ஆராய்ச்சிக்காக எலிகளில் மனித புற்றுநோய் செல்கள் செலுத்தப்பட்டன.
இதன் விளைவாக எலிகளில் டியூமர் கட்டி உருவானது. பின்னர் அந்த எலிகளுக்குக் கதிர்வீச்சுச் சிகிச்சை, மருந்து சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்தப் புற்றுநோய் செல்கள் இறக்கும் போது, சிறிய துண்டுகளாக உடைந்து குரோமடின் துகள்களாக உருவாகி உடலின் ஆரோக்கியமான செல்களுக்குள் நுழையும்போது, அந்தச் செல்களையும் புற்றுநோயுள்ளதாக மாறும்.
இதற்கு தீர்வுகாண R+Cu ஆக்ஸிஜன் மூலக்கூறுகளை உருவாக்கி குரோமடின் துகள்களை அழிக்கும் மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
புற்றுநோய் மீண்டும் வருவதைத் தடுப்பதில் இது சுமார் 30 சதவீதம் வரை பயனுள்ளதாக இருக்கும். கணையம், நுரையீரல் மற்றும் வாய் புற்றுநோய்க்கும் இந்த மருந்து பயனுள்ளதாக இருக்கும் என்றார்.
ஜூலை மாதத்தில் இந்த மாத்திரை சந்தைக்கு வர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
August 25, 2025, 8:03 pm
ககன்யான் திட்டத்தில் இந்தியா முக்கிய சோதனை
August 15, 2025, 12:02 am
நிலவில் அணு மின் நிலையம்: விரைவுபடுத்துகிறது நாசா
August 9, 2025, 2:54 pm
பிரபல அமெரிக்க விண்வெளி வீரர் ஜிம் லோவெல் காலமானார்
July 31, 2025, 10:18 pm
ரூ.12,000 கோடியிலான இஸ்ரோ - நாசாவின் நிசார் செயற்கைக்கோள் வெற்றிகரமாக நிலைநிறுத்தம்
July 28, 2025, 1:37 pm
ரூ.30,000 கோடியில் தமிழ்நாட்டில் ஆப்பிள் நிறுவனத்துக்கான மின்னணு உதிரிபாக தொழிற்சாலை
July 28, 2025, 10:50 am
ஸ்ரீஹரிகோட்டாவில் ராக்கெட் ஏவுவதால் மீனவா்கள் கடலுக்கு செல்ல தடை
July 16, 2025, 5:58 pm
விண்ணிலிருந்து மண்ணில் கால்பதித்தார் சுபான்ஷு சுக்லா
July 3, 2025, 4:36 pm