நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

விமானத்தில் சுற்றித் திரிந்த எலி: 3 நாட்களுக்கு விமானம் நிறுத்தம் 

கொழும்பு: 

இலங்கையின் தேசிய விமான நிறுவனம், அதன் விமானம் ஒன்று 3 நாள்களுக்குச் செயல்படாததற்கு எலியைக் காரணம் காட்டியுள்ளது.

பாகிஸ்தானின் லாகூர் (Lahore) நகரிலிருந்து இலங்கைத் தலைநகர் கொழும்புக்கு வந்துகொண்டிருந்தபோது SriLankan Airlines A330 விமானத்தில் எலி காணப்பட்டது.

அதைத் தொடர்ந்து விமானம் 3 நாள்களுக்குக் கொழும்பில் (Colombo) நிறுத்தப்பட்டது.

எலி விமானத்தின் முக்கியப் பகுதிகளைக் கடித்துச் சேதப்படுத்தவில்லை என்பதை உறுதிசெய்ய விமானம் முழுதும் தேடப்பட்டது.

கடைசியில் அந்த எலி மாண்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.

பிறகுதான் விமானம் மீண்டும் செயல்பட ஆரம்பித்தது.

ஆயினும் மூன்று நாள்கள் விமானம் பறக்காததால் பயண அட்டவணையில் பெரிய குளறுபடி ஏற்பட்டதாக அதன் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஏற்கனவே விமான நிறுவனத்தின் நிதி நிலைமை மோசம். 

சென்ற ஆண்டு (2023) SriLankan Airlines, 1.8 பில்லியன் டாலருக்கு மேல் இழந்தது.

ஆதாரம்: மீடியா கோர்ப் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset