நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நாட்டில் சிறந்த அர்ச்சகர்களை உருவாக்குவதே  மலேசிய ஸ்ரீ ஆதிசங்கரர் திருமடத்தின் இலக்கு

அம்பாங்: 

நாட்டில் சிறந்த அர்ச்சகர்களை உருவாக்குவதே மலேசிய ஸ்ரீ ஆதிசங்கரர் திருமடத்தின் இலக்கு என்று அதன் ஸ்தாபகர் சுவாமி மகேந்திர குருக்கள் கூறினார்.

இந்திய பிள்ளைகளிடம் சமய புரட்சியை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் மலேசிய ஸ்ரீ ஆதிசங்கரர் திருமடம் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

குறிப்பாக பள்ளி விடுமுறை காலங்களில் இந்து சமய வகுப்புகள் நடத்தப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து 10 நாட்களுக்கு அர்ச்சகர்கள் பயிற்சிகள் நடத்தப்பட்டது.

இம்முறை 60 பேருக்கும் மேல் இந்த பயிற்சியில் கலந்து கொண்டனர்.

May be an image of 9 people and temple

அவர்களுக்கு வேத மந்திரம், திருமுறைகள், சமய சொற்பொழிவுகள் என எல்லாவற்றையும் கற்றுக் கொண்டனர்.

இப்பயிற்சி வெற்றி கரமாக நடந்ததற்கு அரசு சாரா இயக்கங்களும் பெற்றோர்களும் வழங்கிய ஆதரவே முக்கிய காரணமாக அமைந்தது.

இதுபோன்ற பயிற்சிகள் தொடர்ந்து நடத்தப்படும். 

குறிப்பாக நாட்டில் நிலவும் அர்ச்சகர்கள் பற்றாக்குறை பிரச்சினைக்கு இந்த பயிற்சிகள் ஒரு தீர்வை வழங்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

-பார்த்திபன் நாகராஜன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset