நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

ராஜிவ்காந்தி கொலை வழக்கில் விடுதலையான சாந்தன் உடல்நலக்குறைவால் காலமானர் 

சென்னை: 

முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் விடுதலையான சாந்தன் உடல்நலக்குறைவால் காலமானார். 

சாந்தனுக்கு கடந்த ஜனவரி மாதம் உடல் நிலை பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

கல்லீரல் செயலிழப்புக்கு உள்ளான சாந்தனுக்கு பல்வேறு உடல் நல பாதிப்புகள் ஏற்பட்டிருப்பதாக மருத்துவர்கள் கூறினர். 

அதேவேளையில் பிற பாதிப்புகளுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். 

இந்நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த சாந்தன் சிகிச்சை பலனின்றி காலை 7.50 மணிக்கு உயிரிழந்ததாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset