நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

UAEயில் உள்ள 900 சிறைவாசிகளின் மறுவாழ்வுக்கு இந்திய வர்த்தகர் 1 மில்லியன் திர்ஹம் நன்கொடை 

துபாய்: 

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள 900 சிறைவாசிகளுக்கு இந்திய வர்த்தகர் ஒருவர் 1 மில்லியன் திர்ஹம் நன்கொடையாக அளித்துள்ளது பெரும் வியப்பினை ஏற்படுத்தியுள்ளது. 

PURE GOLD GROUP நிறுவனத்தின் தோற்றுநரும் தலைவருமான ஃபிரோஸ் மெர்சந்த் ஒரு மில்லியன் திர்ஹம் நன்கொடையாக வழங்கியுள்ளார். அத்துடன் 900 சிறை கைதிகளை விடுதலைக்கும் அவர் உதவியுள்ளார். 

கடந்த சில ஆண்டுகளில் அவர் 25 மில்லியன் திர்ஹாம் தொகையை கொண்டு சுமார் 20,000 பேரின் கடன், அபராதங்களை செலுத்தியுள்ளார்.

தவறு செய்த மனிதர்களுக்கு இரண்டாவது வாய்ப்பாக அவர்களை அவர்களின் குடும்ப உறுப்பினர்களிடம் இணைப்பதுதான் தனது நோக்கம் என்றும் அவர்கள் மீண்டும் மறுவாழ்வு வாழ இது உதவும் என்று ஃபிரோஸ் சொன்னார். 

தமது நடவடிக்கைக்கு ஐக்கிய அரசு சிற்றரசு அரசாங்கமும் உறுதுணையாக இருப்பதை எண்ணி மகிழ்ச்சி கொள்வதாக ஃபிரோஸ் குறிப்பிட்டார்.

- மவித்ரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset