நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

எப்ஏ கிண்ண காலிறுதியாட்டத்தில் மென்செஸ்டர் சிட்டி

லண்டன்:

எப்ஏ கிண்ண கால்பந்துப் போட்டியின் காலிறுதியாட்டத்திற்கு
மென்செஸ்டர் சிட்டி அணியினர் முன்னேறி உள்ளனர்.

கெனில்வோர்ட் அரங்கில் நடைபெற்ற 4ஆவது சுற்று ஆட்டத்தில் மென்செஸ்டர் யுனைடெட் அணியினர் லூதோன் டவுன் அணியை சந்தித்து விளையாடினர்.

இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய மென்செஸ்டர் சிட்டி அணியினர் 6-2 என்ற கோல் கணக்கில் லூதோன் டவுன் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

மென்செஸ்டர் சிட்டி அணிக்காக அதன் முன்னணி ஆட்டக்காரர் எர்லிங் ஹாலண்ட் 5 கோல்களை அடித்து அசத்தினார்.

மற்றொரு கோலை மேத்தியூ கோவாசிக் அடித்தார்.

இந்த வெற்றியை தொடர்ந்து மென்செஸ்டர் சிட்டி அணியினர் எப்ஏ கிண்ண கால்பந்துப் போட்டியின் அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.

மற்றொரு ஆட்டத்தில் நியூகாஸ்டல் அணியினர் 4-3 என்ற பெனால்டி கோல் கணக்கில் பிளாக்பர்ன் ரோவர்ஸ் அணியை வீழ்த்தினர்.

லெய்செஸ்டர் சிட்டி அனியினர் 1-0 என்ற கோல் கணக்கில் ஏஎப்சி போர்னமௌத் அணியை வீழ்த்தினர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset