நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

காசாவுக்கு அத்தியாவசிய பொருள்கள் செல்ல இஸ்ரேல் தடை

ராஃபா:

காசாவுக்குள் அத்தியாவசியப் பொருள்களைக் கொண்டு செல்லவிடாமல் இஸ்ரேல் தடை விதித்துள்ளதாக சர்வதேச மனித உரிமைகள் அமைப்பான ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் குற்றஞ்சாட்டியுள்ளது.

காசாவில் பொதுமக்கள் உயிழப்பைத் தடுக்கவும், அத்தியாவசியப் பொருள்கள் சென்றடைவதை உறுதிப்படுத்தவும் இஸ்ரேலுக்கு ஐ.நா.வின் சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில் ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் அமைப்பு இந்தக் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளது. அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில்,

காசா மக்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள் கிடைக்கச் செய்வது குறித்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கடந்த மாதம் பிறப்பித்த உத்தரவை இஸ்ரேல் பின்பற்றவில்லை.

ஒரு மாதத்துக்குள் அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், ஒரு மாதம் நிறைவடைந்த பிறகும் அதற்கான எந்த நடவடிக்கைகளையும் இஸ்ரேல் மேற்கொள்ளவில்லை என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset