நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

பஞ்சாப் மாகாண முதல் பெண் முதல்வரான மரியம் நவாஸ்

லாகூர்:

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண முதல் பெண் முதல்வராக, முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃபின் மகள் மரியம் நவாஸ் பொறுப்பேற்றார்.

கடந்த 8ம் தேதி பஞ்சாப், சிந்து, பலூசிஸ்தான், கைபர் பக்துன்கவா ஆகிய மாகாணப் பேரவைகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. இதில் மரியம் நவாஸ் வெற்றி பெற்றார்.

நாடாளுமன்றத்தில் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் (பிஎம்எல்என்) கட்சியைச் சேர்ந்த முன்னாள் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப் தலைமையில் ஆட்சி அமைய உள்ளது.

அந்த அரசுக்கு முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் பிலாவல் புட்டோ ஜர்தாரியின் தலைமையிலான பாகிஸ்தான் மக்கள் கட்சி ஆதரவு தருகிறது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset