நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

இலங்கையில் சுட்டெரிக்கும் வெப்பம்: கல்வி அமைச்சு எச்சரிக்கை 

கொழும்பு: 

அதிக வெப்பமான வானிலை காரணமாக பாடசாலை மாணவர்கள் வெளிப்புற நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தவிர்க்குமாறு கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

அதிக வெப்பநிலை நிலவும் நாட்களில் இல்ல விளையாட்டு போட்டிகள், பயிற்சிகளை நடத்துவதை தவிர்க்க வேண்டும் என சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

இது தொடர்பில் கல்வி நிலைய முதல்வர்களுக்கு அறிவிக்குமாறு அனைத்து மாகாண கல்விப் பணிப்பாளர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டு குறிப்பிட்டுள்ளது.

Rising temperatures to carry big price tag in steamy Sri Lanka | News |  Eco-Business | Asia Pacific

அதன்படி, அதிக வெப்பம் காரணமாக தசை பிடிப்பு, அதிக வேர்வை, மயக்கம், உடல் சோர்வு, உடல் வெப்பம் அதிகரிப்பு, வலிப்பு, தலைவலி, நினைவிழப்பு, நாடித் துடிப்பு அதிகரிப்பு ஆகிய ​நோய்கள் ஏற்படக் கூடும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்போது, அனைத்து செயற்பாடுகளில் இருந்தும் விலகி நிழலான இடத்தில் ஓய்வெடுத்தல், போதுமான அளவு நீரினை அருந்துதல், 15 நிமிடத்திற்கு ஒரு தடவை அரை கோப்பை நீர்  போன்ற முதலுதவிகளை வழங்குமாறும் வலிப்பு, நினைவிழப்பு போன்ற நோய் நிலைமைகளின் போது வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்குமாறும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நிஹார் தய்யூப்

தொடர்புடைய செய்திகள்

+ - reset