நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் வணிகம்

By
|
பகிர்

குற்றாலம் போர்டர் உணவகம் மலேசியாவில் திறப்பு விழா கண்டது

கோலாலம்பூர்:

குற்றாலம் போர்டர் ரஹ்மத் உணவகம் மலேசியாவில் அதிகாரப்பூர்வமாக திறப்பு விழா கண்டது.

தமிழ்நாட்டில் புகழ் பெற்ற குற்றாலம் போர்டர் ரஹ்மத் உணவகத்தின் முதல் கிளை கோலாலம்பூரில் ஜாலான் மஸ்ஜித் இந்தியா வட்டாரத்தில் திறக்கப்பட்டுள்ளது.

குற்றாலம் போர்டர் ரஹ்மத் உணவகம் பல நாடுகளில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதன் ஒரு நிறுவனக் கிளையை கோலாலம்பூரில் திறந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. மலேசிய மக்களுக்கு எங்கள் கைப்பக்குவம் நிச்சயம் பிடிக்கும் என்று அதன் நிறுவனர் முஹம்மத் அசன் கூறினார். 

பங்குதாரர்களான அல் பிடாயா உணவக உரிமையாளர் நசர், புர்ஹான், துபாய் பவர் குரூப் ஜாஹிர் ஹுசைன் ஆகியோருக்கு (NRTIA MALAYSIA)வெளிநாட்டு வாழ் தமிழ் இந்தியர்களின் சங்கத்தின் மலேசியத் தலைவர் M.S.B.முஹம்மது  பிர்தவுஸ் கான், ஜெய்லானி, காசிம், அஜின்ஷா, முகமது பிர்தவுஸ்,காதர் மீரான், அப்துல் காதர், ரபிக்,கணேசன் துவக்க விழாவில் கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்தனர். 

குற்றாலம் போர்டர் ரஹ்மத் உணவகத்தை மலேசியாவில் திறந்துள்ள முஹம்மத் அசனுக்கு (NRTIA MALAYSIA)வெளிநாட்டு வாழ் தமிழ் இந்தியர்களின் சங்கத்தின் மலேசியத் தலைவர் M.S.B.முஹம்மது பிர்தவுஸ் கான் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset