செய்திகள் தொழில்நுட்பம்
ஜொகூருக்கும் சிங்கப்பூருக்கும் இடையில் விரைவில் ஆளில்லா வானூர்திகளில் பொருள் விநியோகம்
ஜொகூர் பாரு:
ஜொகூர் பாருவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையில் பொருள்களை அதிவேகத்தில் விநியோகிக்கப் புதிய வசதி விரைவில் அறிமுகம் ஆகலாம்.
ஆளில்லா வானூர்திகளின் உதவியுடன் அது சாத்தியமாகக்கூடும்.
திட்டம் வெற்றிகரமாக நடைமுறைக்கு வந்தால்
தென்கிழக்காசியாவின் முதல் ஆளில்லா வானூர்தி விநியோகச் சேவையாக அது விளங்கும்.
ஆவணங்கள், மருந்துப் பொருள்கள் போன்றவற்றை அவசரமாகக் கொண்டுசேர்க்க வேண்டியிருந்தால் அந்தச் சேவையை நாடலாம்.
ஆளில்லா வானூர்திகள் அதிகபட்சமாக 30 கிலோகிராம் எடையை ஏந்திச்செல்லும்.
சிங்கப்பூரின் DroneDash நிறுவனமும் மலேசிய நிறுவனமான Aerodyneஉம் இணைந்து திட்டத்தை உருவாக்கியுள்ளன.
கடல்வழி சரக்கு விநியோகத்தைவிட 5 மடங்கு விரைவாக வானூர்திகளால் பொருள்களைக் கொண்டுசேர்க்க முடியும் என்கின்றன நிறுவனங்கள்.
கரிம வெளியேற்றத்தின் அளவும் குறைவு என்பதால் சுற்றுச்சூழலுக்கு இத்திட்டம் உகந்ததாக அமையும்.
தொடக்கமாக சிங்கப்பூருக்கும் ஜொகூர் பாரு உள்ளிட்ட தென் மலேசியப் பகுதிகளுக்கும் இடையே விநியோகச் சேவை அறிமுகமாகும்.
பின்னர் மலேசியாவின் மற்ற பகுதிகளுக்கும் ஏனைய வட்டார நாடுகளுக்கும் சேவையை விரிவுபடுத்தத் திட்டமுள்ளது.
இந்த ஆண்டின் மூன்றாம் காலாண்டிற்குள் வாடிக்கையாளர் சேவை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆதாரம்: CNA
தொடர்புடைய செய்திகள்
April 24, 2026, 4:18 pm
ஏஐ-க்காக மெட்டாவின் மெகா பிளான்: 8,000 ஊழியர்கள் பணிநீக்கம் செய்ய வாய்ப்பு
April 23, 2026, 12:09 pm
வரலாறு படைக்கும் பாகிஸ்தான் விண்வெளி வீரர்கள்: சீனா வழங்கும் பிரத்யேகப் பயிற்சி
April 20, 2026, 11:18 am
சீனாவின் புதிய உலக சாதனை: ஆழ்கடல் ஆராய்ச்சிக்காகப் பிரம்மாண்ட 'மிதக்கும் தீவு' தயார்
April 19, 2026, 6:49 pm
ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட booster-ஐக் கொண்டு ராக்கெட்டைப் பாய்ச்சும் Blue Origin
April 4, 2026, 2:08 pm
இசைக் கலைஞர்கள் இனி தேவை இல்லையா?: இசை உலகை ஆட்டிப்படைக்கும் ஏஐ
March 25, 2026, 11:50 am
சிறுவர்கள் வாழ்க்கையில் விளையாடிய மெட்டா: 375 மில்லியன் டாலர் அபராதம் விதித்த நீதிமன்றம்
March 24, 2026, 12:34 pm
காப்புரிமைப் போர்: சீனத் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு இடையே முற்றிய மோதல்
March 23, 2026, 10:31 am
