
செய்திகள் தொழில்நுட்பம்
மூளையில் சிப் பொருத்தப்பட்ட நபரின் எண்ணங்களால் கம்ப்யூட்டர் மவுஸ் இயங்குகிறது: எலான் மஸ்க்
கலிப்போர்னியா:
நரம்பியல் நிலைமைகள் அல்லது அதிர்ச்சிகரமான காயங்கள் உள்ள மனிதர்களின் மூளைக்குள் சிப் பொருத்தி, அவர்களை இந்தப் பாதிப்பில் இருந்து மீட்க எலான் மஸ்க் 'நியூராலின்க்' என்ற நிறுவனத்தைத் தொடங்கினார்.
இந்த நிறுவனம் மனிதர்களின் மூளையில் சிப் பொருத்தும் முதல் முயற்சியின் முதற்கட்ட சோதனை வெற்றிக்கரமாக நடந்து முடிந்திருப்பதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
கழுத்து பகுதியில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாகப் பக்கவாத பாதிப்புக்கு ஆளான நோயாளிகளின் மூளையில் சிப் பொருத்தப்படும்.
இதன்மூலம் அவர்களின் எண்ணத்தின் அடிப்படையில் கம்ப்யூட்டரின் கர்சர் மற்றும் கீபோர்டு உள்ளிட்டவைகளைக் கட்டுப்படுத்த முடியும்.
கடந்த 2016-ம் ஆண்டு இதற்கான பணிகள் தொடங்கப்பட்டன.
பின்னர் இந்தத் திட்டத்தை மனிதர்களிடம் சோதனை செய்வதற்காக எலான் மஸ்க் அமெரிக்க அரசிடம் அனுமதி பெற்றிருந்தார்.
அதன்படி பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு, இந்தச் சோதனையில் ஈடுபடத் தேர்வு செய்யப்பட்ட முதல் நபரிடம் ஆய்வு தொடங்கப்பட்டது.
அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்தச் சிப் முதன்முதலாக வெற்றிகரமாக மனிதரின் மூளையில் பொருத்தப்பட்டது.
சிப் பொருத்தப்பட்ட நபர் தற்போது குணமடைந்து வருகிறார் என்றும் அவரது எண்ணங்களை பயன்படுத்தி கம்ப்யூட்டர் மவுசை கட்டுப்படுத்துகிறார் என்றும் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
August 25, 2025, 8:03 pm
ககன்யான் திட்டத்தில் இந்தியா முக்கிய சோதனை
August 15, 2025, 12:02 am
நிலவில் அணு மின் நிலையம்: விரைவுபடுத்துகிறது நாசா
August 9, 2025, 2:54 pm
பிரபல அமெரிக்க விண்வெளி வீரர் ஜிம் லோவெல் காலமானார்
July 31, 2025, 10:18 pm
ரூ.12,000 கோடியிலான இஸ்ரோ - நாசாவின் நிசார் செயற்கைக்கோள் வெற்றிகரமாக நிலைநிறுத்தம்
July 28, 2025, 1:37 pm
ரூ.30,000 கோடியில் தமிழ்நாட்டில் ஆப்பிள் நிறுவனத்துக்கான மின்னணு உதிரிபாக தொழிற்சாலை
July 28, 2025, 10:50 am
ஸ்ரீஹரிகோட்டாவில் ராக்கெட் ஏவுவதால் மீனவா்கள் கடலுக்கு செல்ல தடை
July 16, 2025, 5:58 pm
விண்ணிலிருந்து மண்ணில் கால்பதித்தார் சுபான்ஷு சுக்லா
July 3, 2025, 4:36 pm