நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

நடிகை த்ரிஷாவுக்கு எதிரான அவதூறு கருத்து; ஏ.வி. ராஜூவிற்கு எதிராக வலுக்கும் கண்டனம் 

சென்னை; 

தமிழ்ச்சினிமாவின் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் த்ரிஷா கிருஷ்ணனுக்கு எதிராக அதிமுகவின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் அருவறுக்கத்தக்க வகையில் பேசியிருப்பது தொடர்பில் சம்பந்தப்பட்ட ஆடவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை பாயும் என்று நடிகை த்ரிஷா அறிவித்துள்ளார். 

கூவத்தூர் விடுதியில் 25 லட்சம் கொடுக்கப்பட்டு நடிகை த்ரிஷா வரவழைக்கப்பட்டதாகவும் இதனை ஏற்பாடு செய்தது அப்போது அதிமுக கூட்டணியுடன் இருந்த ஒரு முன்னணி நடிகர் என்றும் ஏ.வி.ராஜூ தெரிவித்தார். 

இவர் வழங்கிய பேட்டியானது சமூக ஊடகங்களில் வைரலானதைத் தொடர்ந்து பலரும் அதிமுகவின் முன்னாள் உறுப்பினர் ஏ.வி.ராஜூவிற்கு எதிராக கண்டனங்களைப் பதிவு செய்தனர். 

இந்நிலையில் தாம் கூறிய கருத்திற்காக நடிகை த்ரிஷாவிடம் ஏ.வி.ராஜூ மன்னிப்பு கேட்டுக்கொண்டார். மேலும், தாம் கூறிய கருத்து பொய்யாக சித்திரிக்கப்பட்டுள்ளதாகவும் தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். 

நடிகை த்ரிஷாவை இவ்வாறு பேசியிருப்பது அதிமுக கட்சி வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset