நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் வணிகம்

By
|
பகிர்

மலேசிய ரிங்கிட் 26 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வீழ்ச்சியடைந்துள்ளது

பெட்டாலிங் ஜெயா: 

சீனாவின் மந்தமான பொருளாதாரம், நாட்டின் கண்ணோட்டத்தை எடைபோடுவதால், ஆசிய நிதி நெருக்கடிக்குப் பிறகு, ரிங்கிட்டின் மதிப்பு மிகக் குறைந்த அளவிற்கு சரிந்தது.

உள்ளூர் நாணயம் இன்று டாலருக்கு எதிராக 0.2% சரிந்து 4.7965 ஆக உள்ளது.

இது பிராந்திய நிதி நெருக்கடியின் வீழ்ச்சியைத் தொடர்ந்து 1998-ஆம் ஆண்டில் மலேசிய ரிங்கிட் 4.88- ஆக இருந்தது.  

2024-ஆம் ஆண்டில்  ரிங்கிட்டின் நிலை 4%க்கு சரிந்துள்ளது. 

டிசம்பர் வரையிலான மூன்று மாதங்களில் சீனாவுக்கான ஏற்றுமதி குறைந்ததால் மலேசியாவின் பொருளாதாரம் எதிர்பார்த்ததை விட மெதுவாக வளர்ந்தது.

இதனால், உற்பத்தி செயல்பாடு பலவீனமாக இருந்தது.

2024-ஆம் ஆண்டிற்கான நாட்டின் வளர்ச்சிப் பாதை இன்னும் வெளியிலும் உள்நாட்டிலும் அபாயங்கள் நிறைந்ததாகவே உள்ளது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset