செய்திகள் சிந்தனைகள்
துணைப் பிரதமர் பதவி ஏன் அறிவிக்கப்படவில்லை?
புத்ராஜெயா:
புதிய அமைச்சரவையில் துணைப் பிரதமராக ஏன் யாரும் நியமிக்கப்படவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது. இந் நிலையில், வீண் குழப்பங்கள், சிக்கல்கள் எழக்கூடாது என்பதற்காகவே பிரதமர் அந்த அறிவிப்பை தவிர்த்ததாக கூறப்படுகிறது.
துணைப் பிரதமர் நியமனம் என்பது பிரதமர் இஸ்மாயில் சப்ரி எதிர்கொள்ள இருக்கும் பல்வேறு அறைகூவல்களில் ஒன்றாக இருக்கும் என அரசியல் பார்வையாளர்கள் தெரிவித்திருந்தனர்.
பிரதமர் சார்ந்துள்ள அம்னோ கட்சி சார்பாக துணைப் பிரதமர் நியமிக்கப்பட வேண்டும் என ஒரு பக்கம் கோரிக்கை எழுந்துள்ளதாக அண்மையில் ஒரு தகவல் வெளியானது.
இந் நிலையில், 51 எம்பிக்களின் ஆதரவை பெரிக்கத்தான் கூட்டணி வழங்கி இருப்பதால், புதிய பிரதமர் அதை மனதிற்கொண்டு முடிவுகளை எடுக்க வேண்டும் என்று பெர்சாத்து கட்சித் தலைவர்கள் வலியுறுத்தினர்.
மேலும், புதிய அராசங்கமானது முந்தைய பிரதமர் மொஹைதின் யாசின் தலைமையிலான பெரிக்கத்தான் அரசாங்கத்தின் தொடர்ச்சி தான் என்றும் பெர்சாத்து கட்சியினர் கூறினர். அக் கட்சியைச் சேர்ந்த ஒருவரை துணைப் பிரதமராக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே, சபா, சரவாக் மாநிலங்களின் வளர்ச்சியையும், நாட்டுக்கு அம் மாநிலங்கள் அளித்துள்ள பங்களிப்பையும் கவனத்தில் கொண்டு துணைப் பிரதமர் பதவிக்கு ஒருவரை நியமிக்க வேண்டும் எனும் கோரிக்கையும் எழுந்துள்ளது. ஜிபிஎஸ் கூட்டணி இந்த கோரிக்கையை வலுவாக வலியுறுத்தி உள்ளது.
இதனால், உடனடியாக துணைப் பிரதமரை அறிவிப்பது புதிய பிரதமருக்கு உண்மையாகவே சவாலாக மாறியுள்ளது. எனவே, உரிய ஆலோசனைக்குப் பிறகே துணைப் பிரதமரை அறிவிப்பது என டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகூப் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
ஒரு தரப்பை திருப்திபடுத்தன் மூலம் மற்ற இரு தரப்பையும் பகைத்துக்கொள்ள அவர் விரும்ப மாட்டார். பதவியேற்ற கையோடு எதிர்க்கட்சிகளுடன் அவர் செய்துகொண்ட உடன்பாடு மிகச் சரியான, பாராட்டுக்குரிய நடவடிக்கை என அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
அமைச்சரையும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாக மக்களின் சிரமங்களை குறைக்கவும் பிரச்சினைகளைத் தீர்க்கவும்தான் பிரதமர் முன்னுரிமை அளிப்பார் எனத் தெரிய வருகிறது.
இதற்கான நடவடிக்கைகள் வேகம் எடுக்கும்போது துணைப் பிரதமர் குறித்த அறிவிப்பு வெளியாகக்கூடும் என அரசியல் களத்தில் பேசப்படுகிறது. எனினும், அரசியல் ரீதியிலான நெருக்கடிகள் ஏற்படும் பட்சத்தில் அல்லது தமக்கு ஆதரவு அளிக்கும் கட்சிகளுக்கு மத்தியில் இணக்கம் ஏற்பட்டால் துணைப் பிரதமர் குறித்த அறிவிப்பு வெளியாகவும் வாய்ப்புள்ளது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
- அறிவுக்கரசு
தொடர்புடைய செய்திகள்
December 13, 2024, 7:47 am
நீங்கள் நீங்களாக இருங்கள் - வெள்ளிச் சிந்தனை
December 11, 2024, 6:49 pm
பாரதி செல்லம்மாள் சிலை - சிறப்புக் கட்டுரை
December 6, 2024, 7:17 am
பெருமை அடித்துக் கொண்டிருக்காதீர்கள் - வெள்ளிச் சிந்தனை
November 29, 2024, 7:00 am
நல்லவன் எங்கிருந்தாலும் நல்லவனாகவே இருப்பான்
November 15, 2024, 7:44 am
வேஷம் என்பது... - வெள்ளிச் சிந்தனை
November 8, 2024, 7:21 am
உலகம் சோதனைக் களம்: இங்கு கூலியை எதிர்பார்க்கக் கூடாது - வெள்ளிச் சிந்தனை
November 1, 2024, 9:31 am
நல்லவற்றையே பேசுங்கள் - வெள்ளிச் சிந்தனை
October 25, 2024, 1:14 am
சகோதர தாத்பர்யம் எப்படி இருக்க வேண்டும்? - வெள்ளிச் சிந்தனை
October 18, 2024, 8:09 am
அன்பு மகனே...! - வெள்ளிச் சிந்தனை
October 11, 2024, 8:35 am