நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் சிந்தனைகள்

By
|
பகிர்

பெருமை அடித்துக் கொண்டிருக்காதீர்கள் - வெள்ளிச் சிந்தனை

சிறுவர் யூசுஃப் (அலை) தாம் கண்ட கனவை  தந்தையிடம் கூறினார். அதற்கு தந்தை கூறினார்:

"என் அருமை மகனே! உனது கனவை உன் சகோதரர்களிடம் கூறிவிடாதே! அவ்வாறு கூறினால் அவர்கள் உனக்கு எதிராக சதி செய்ய முற்படுவார்கள்'' (திருக்குர்ஆன் 12:05)

அல்லாஹ் உங்களுக்குத் தந்திருக்கும் அருட்கொடைகள் குறித்து எல்லோரிடத்திலும் தம்பட்டம் அடிக்காதீர்கள். 

அனைவரிடத்திலும் சொல்லிக் கொண்டிருக்காதீர்கள்.

ஒரு சிலரின் உள்ளங்களில் பொறாமை இருக்கும்.

ஒரு சிலரின் கண்களில் விஷம் இருக்கும்.

அல்லாஹ் தந்த அருட்கொடைகளுக்காக அவனைப் புகழ்ந்தும், அடுத்தவரிடம் மறைத்தும் அவற்றைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

அல்லது குறைந்தபட்சம் அனைவரிடமும் சொல்லிக் காட்டி பெருமையடிக்காமலாவது இருங்கள்.

காரணம், அடுத்தவர் அருட்கொடைகள் அகன்று சென்றால்தான் பொறாமைக்காரன் நிம்மதியடைவான்.

சொந்த சகோதரன் கண்ட கனவுக்காக கூடப்பிறந்த அண்ணன் தம்பிகளே முற்காலத்தில் பொறாமை கொண்டுள்ளனர்.

அவ்வாறெனில், உங்கள் வருமானம், தொழில், செல்வம் போன்றவற்றில் மக்களிடமிருந்து நீங்கள் பாதுகாப்புப் பெற விரும்புகிறீர்களா...?

எனில், உங்கள் அருட்கொடைகளை அனைவரிடமும் கூறிக் கொண்டிருக்காதீர்கள்.

- நூஹ் மஹ்ழரி

தொடர்புடைய செய்திகள்

+ - reset