நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் சிந்தனைகள்

By
|
பகிர்

பாரதி செல்லம்மாள் சிலை - சிறப்புக் கட்டுரை

(இன்று மகா கவி பாரதியார் பிறந்த நாள். அவரது பிறந்த நாளை ஒட்டி இந்தக் கட்டுரை வெளியிடுகிறோம்.)

உலகெங்கும் பாரதியாருக்குச் சிலை உண்டு. எங்கும் அவர் தனியாக நிற்க,  தன் மனைவி செல்லம்மாளின் தோள் மீது பாரதி கைபோட்டு நிற்கும் சிலை இருக்கும் ஒரே ஊர் கடையம்.  அது செல்லம்மாள் பிறந்த இடம்.

புதுச்சேரியில் இருந்து பாரதி வெளியே வந்த போது அவர் மூன்று ஊர்களில் இருக்கலாம் என்று அரசு உத்தரவிட்டது. அதில் ஒன்று கடையம்.

சுற்று வட்டார மக்கள் தன் கணவரை அந்நியராகப் பார்க்கும் சூழலில் செல்லம்மாள்  பாரதியாரை அரவணைத்துக் கொண்டதுடன் அவர் எழுதிய மொத்த கவிதைகளையும் பாதுகாத்து வைத்திருந்தார். செல்லம்மாள் இல்லை என்றால் பாரதியாரின் கவிதைகள் கிடையாது. 

செல்லம்மாளுக்குச் சிலை வைக்க வேண்டும் என்ற என்ற முயற்சியைக் கடையம் நலச் சங்கத்தின் தலைவர் கல்யாணி சிவசாமிநாதன் மற்றும் சேவாலயா கல்வி நிறுவனத்தை நடத்தி வரும் முரளிதரன் ஆகிய இருவரும் முன்னெடுத்தனர்.

"சாலையில் சிலை வைக்கக்கூடாது. கட்டட வளாகத்துக்குள் வைக்க வேண்டும் என்றது அரசு. அக்ரஹாரத் தெருவில் யாராவது தங்கள் வீட்டை விலைக்குத் தருவார்களா என்று முயன்றார்கள். கிடைக்கவில்லை. 

பக்கத்துத் தெருவில் இடிந்து விழும் நிலையில் இருந்த அரசு நூலகத்தைப் புதுப்பித்து அதன் நடுவில் சிலையை அமைத்தார்கள். 

2022ஆம் ஆண்டு ஜூன் 27ஆம் நாள் பாரதி செல்லம்மாளின் 125 வது மணநாள் அன்று பாரதி- செல்லம்மாள் சிலை அங்கு அமைக்கப்பட்டது ஆண்டுதோறும் பாரதி செல்லம்மாள் நினைவாக விழாக்கள் நடத்துகிறார்கள்.

பாரதியார் கடையத்தில் இருந்த போது தன் மகளை அங்கிருக்கும் சத்திரம் பள்ளியில் சேர்க்கச் சென்றிருக்கிறார். "பெண்களை எல்லாம் சேர்க்க முடியாது" என்று அங்குச் சொல்லி இருக்கிறார்கள்.  பாரதியின் கோபம் உச்சமடைந்து ஊர் பெரியவர்களைச் சந்தித்துச் சண்டையிட்டுத் தன் மகளை அந்தப் பள்ளியில் சேர்த்திருக்கிறார்.  அந்தச் சத்திரம் பள்ளியில் கல்வி பயிலச் சென்ற முதல் பெண் பாரதியாரின் மகள்தான்.

பாரதியார் பலரது எதிர்ப்புக்கு இடையில் வாழ்ந்ததும் கழுதைக் குட்டியைத் தோளில் போட்டுக் கொண்டு திரிந்ததும் தன் மனைவி செல்லம்மாளின் தோளில் கைபோட்டு நடந்து சென்றதும் அங்கிருக்கும் அக்கிரஹாரத் தெருவில் தான்.

நன்றி: ஆனந்த விகடன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset