
செய்திகள் சிந்தனைகள்
நீங்கள் நீங்களாக இருங்கள் - வெள்ளிச் சிந்தனை
"அல்லாஹ்விடத்தில் அவர் கண்ணியத்துக்குரியவராய் இருந்தார்'' (33:69)
இது அல்லாஹ்வின் மதிப்பீடு. மனிதர்களின் மதீப்பீடு அல்ல.
ஒருவர் எவ்வளவு நல்லவராக இருந்தாலும் மனிதர்களின் மதிப்பீடு தாறுமாறாகவே இருக்கும்.
* நூஹ் நபியை பொய்யர் என்றார்கள்.
* இப்ராஹீம் நபியை நெருப்பில் வீசினார்கள்.
* ஸாலிஹ் நபிக்கு பெரும் சிரமம் கொடுத்தார்கள்.
* ஷுஐப் நபிக்கு மாறு செய்தார்கள்.
* நபி யஹ்யாவைக் கொலை செய்தார்கள்.
* ஸகரிய்யா நபியை வாளால் அறுத்துக் கொன்றார்கள்.
* ஈஸா நபியை சிலுவையில் அறைய முயன்றார்கள்.
இறுதி நபி (ஸல்) அவர்களுக்கு எண்ணிடலங்கா தீங்குகளைச் செய்தார்கள்.
* மக்காவில் பொய்யர் என்றார்கள்.
* தாயிஃபில் கல்லால் அடித்தார்கள்.
* வீட்டில் வைத்தே கொல்ல முயன்றார்கள்.
* பத்ரிலும் உஹதிலும் அவர்களுடன் போர் செய்தார்கள்.
* கந்தக்கில் முற்றுகையிட்டார்கள்.
* இறைச்சித் துண்டில் விஷம் வைத்தார்கள்.
* மனைவி மீது அபாண்டப் பழி சுமத்தினார்கள்.
இவர்கள் எல்லாம் மனிதப் புனிதர்கள். எனில், சாதாரண மனிதர்களாகிய நாம் மக்களிடமிருந்து தப்பிக்க முடியுமா என்ன?
* தாராளமாக தர்மம் செய்தால் பகட்டுக்காரன் என்பார்கள்.
* கொடுக்காமல் இருந்தால் கஞ்சன் என்பார்கள்.
* உபதேசம் செய்தால் குறை கூறுவதாகச் சொல்வார்கள்.
* மெளனமாக இருந்தால் கோழை என்பார்கள்.
* நன்றாக வியாபாரம் செய்தால் பணத்தாசை பிடித்தவன் என்பார்கள்.
* சும்மா இருந்தால் வேலை வெட்டி இல்லாதவன் என்பார்கள்.
* விமர்சனம் செய்தால் எங்கள் குறைகளைத் தேடுகிறார் என்பார்கள்.
* வாய்மூடி இருந்தால் எங்களைக் குறித்து கவலை இல்லை என்பார்கள்.
மனிதர்கள் இப்படித்தான். அவர்கள் வாயிலிருந்து யாரும் தப்பிக்க முடியாது.
எனவே நீங்கள் நீங்களாக இருங்கள். மக்கள் என்ன சொல்வார்கள்? என்று எதிர்பார்த்து வாழ்ந்தால் அந்தக் கவலையிலேயே மரணம் வந்துவிடும்.
நினைவில் இருக்கட்டும்! மக்களின் திருப்தி அடைய முடியாத ஒன்றாகும்.
நீங்கள் அல்லாஹ்விடம் கண்ணியமாக இருந்தால் போதும்.
- நூஹ் மஹ்ழரி
தொடர்புடைய செய்திகள்
March 30, 2025, 6:07 am
அந்தரத்தில் தொங்கவிடலாமா? - பெருநாள் சிந்தனை
March 28, 2025, 6:02 am
இதய வாசலில் நுழைகிற திறனும் தேர்ச்சியும் கைவசம் இருக்கின்றதா? - வெள்ளிச் சிந்தனை
March 22, 2025, 5:09 pm
உலக தண்ணீர் தினம்: மலேசியா எதிர்கொள்ளும் தண்ணீர் பிரச்சினை
March 14, 2025, 6:11 am
விளிம்பு நிலை மக்களுக்கு உதவுங்கள் - வெள்ளிச் சிந்தனை
March 7, 2025, 6:09 am
அருள் கொழிக்கும் ரமலான்: பிரார்த்தனைகளின் வசந்தகாலம்
February 28, 2025, 10:07 am
மெழுகுவர்த்தி தரும் செய்தி - வெள்ளிச் சிந்தனை
February 21, 2025, 8:28 am
நீரென்ன குழப்பவாதியா? - வெள்ளிச் சிந்தனை
February 18, 2025, 4:33 pm
சிலர், பலராய் ஆகின்ற நாள் வரவே வேண்டும்; வேண்டும் - பாதாசன்
February 14, 2025, 9:21 am