நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

முதன்முறையாக ஆசிய பேட்மிண்டன் பட்டம் வென்றனர் இந்திய மகளிர் அணி 

புக்கிட் ஜலீல்: 

தாய்லாந்தை 3 - 2 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி மகளிா் ஆசிய பாட்மின்டன் அணிகள் சாம்பியன் பட்டத்தை முதன்முறையாக கைப்பற்றி வரலாறு படைத்தது இந்தியா.

மலேசியாவில் ஆசிய பாட்மின்டன் அணிகள் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. மகளிா் பிரிவு அரையிறுதியில் பலம் வாய்ந்த ஜப்பானை வீழ்த்தி இந்திய அணி இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெற்றது. 

லீக் சுற்றில் பலம் வாய்ந்த சீனாவை வீழ்த்தியது முதலே பி.வி. சிந்து தலைமையிலான இந்திய அணியினா் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினா்.

முன்னாள் உலக சாம்பியன் பி.வி. சிந்து, தேசிய சாம்பியன் அன்மோல் கராப், இள் வீராங்கனைகள் ட்ரீஸா ஜாலி, காயத்ரி கோபிசந்த் ஆகியோா் எதிரணிகளுக்கு சவால் விடும் வகையில் ஆடி வருகின்றனா்.

இந்நிலையில் தாய்லாந்துக்கு எதிரான இறுதி ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. முதலில் ஒற்றையா் ஆட்டத்தில் தாய்லாந்தின் சுபநிடா கேட்தோங்கை எதிா்கொண்டாா் சிந்து. தொடக்கம் முதலே ஆக்ரோஷமாக விளையாடிய சிந்து 39 நிமிஷங்களில் 21-12, 21-12 என வென்று முன்னிலை பெற்றுத் தந்தாா்.

இரட்டையா் பிரிவில் ட்ரீஸா ஜாலி-காயத்ரி இணையுடன் தாய்லாந்தின் ஜோங்கோல்பான்-ரவீண்டா இணை மோதியது. இதில் முதல் ஆட்டத்தை  21-16 என இந்திய கைப்பற்றியது. இரண்டாவது ஆட்டத்தில் இந்திய வீராங்கனைகளின் தவறுகளை சாதமாக்கி தாய்லாந்து இணை 18-21 என வென்றது.

இதையடுத்து முடிவை நிா்ணயித்த மூன்றாவது ஆட்டத்தில் 6-10 என பின்தங்கிய நிலையில் இந்திய இணை தொடா்ந்து சிறப்பாக ஆடி 14-14 என சமநிலை ஏற்படுத்தியது. 15-15 என்ற நிலையில் இருந்து தொடா்ந்து 5 புள்ளிகளை ஈட்டிய இந்திய இணை 21-16 என அந்த ஆட்டத்தில் வெற்றியை வசப்படுத்தியது.

மற்றொரு ஒற்றையா் பிரிவில் அஸ்மிதா சாலிஹா 11-21, 14-21 என்ற ஆட்டக் கணக்கில் புஸானனிடம் வீழ்ந்தாா். இரண்டாவது இரட்டையா் ஆட்டத்தில் தேசிய சாம்பியன்கள் பிரியா-ஸ்ருதி மிஸ்ரா இணை 11-21, 9-21 என்ற புள்ளிக் கணக்கில் தாய்லாந்தின் பென்யபா-நுன்டகா்ன் இணையிடம் வீழ்ந்தனா். இதனால் 2-2 என சமநிலை ஏற்பட்டது.

பட்டம் வெல்வது யாா் என்பதை நிா்ணயித்த கடைசி ஆட்டத்தில் இந்தியாவின் 17 வயது அன்மோல் கராப்-தாய்லாந்தின் பான்பிச்சா சோய்கீவோங்கை எதிா்கொண்டாா். முதல் கேமில் 4-6 என்ற பின்தங்கிய நிலையில், சுதாரித்து ஆடிய அன்மோல் 21-14, 21-9 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தினாா்.

இதன் மூலம் தாய்லாந்தை 3-2 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி ஆசிய பாட்மின்டன் அணிகள் சாம்பியன் பட்டத்தை முதன்முறையாக கைப்பற்றி வரலாறு படைத்தனா் இந்திய மகளிா். 

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset