நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

தீவிரமடையும் விவசாயிகள் போராட்டம்

புது டெல்லி: 

தில்லியை நோக்கி பேரணியை முன்னெடுத்துள்ள பஞ்சாப் விவசாயிகள் போலீஸாரின் கண்ணீர் புகைக் குண்டு தாக்குதலுக்கு அஞ்சாமல் தீவிரப்படுத்தி உள்ளனர்.

இதனிடையே, விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் ஒன்றிய அரசு ஞாயிற்றுக்கிழமை 5-ம் சுற்று பேச்சு நடத்தவுள்ளது.

பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டபூர்வ உத்தரவாதம் அளிக்க வேண்டும், பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பஞ்சாபை சேர்ந்த விவசாயிகள் தில்லி நோக்கி பேரணியை முன்னெடுத்துள்ளனர்.

அவர்கள் ஹரியாணா எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் மீது ட்ரோன் மூலம் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை போலீஸார் வீசி தடுத்தனர்.

இப் போராட்டத்தின்போது 63 வயது விவசாயி ஒருவர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

2020-21 இல் விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதிகளை  மோடி அரசு நிறைவேற்றவில்லை.

விவசாயிகள் பிரச்னையில் அரசு வேண்டுமென்றே மெத்தனம் காட்டுகிறது. எனவே, வரும் நாள்களில் போராட்டத்தை தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளோம் என்று சம்யுக்த கிஸான் மோர்ச்சா  அமைப்பு தெரிவித்துள்ளது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset