நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

Culinary Taste of India - உலகப் பிரசித்திபெற்ற சமையல்காரர் இம்தியாஸ் குரைஷி மறைந்தார் 

லக்னோ:

உலகப் பிரசித்திபெற்ற சமையல்காரர் இம்தியாஸ் குரைஷி கான் நேற்று இரவு காலமானார். அவரது சமையலால் பலரது நாவுகளை அவர் கட்டிப்போட வைத்தவர். உலகத்தர உணவுப்பிரியர்களை புருவம் உயர்த்த வைத்த இம்தியாஸ் தமது 93வது வயதில் இயற்கை எய்தினார்.

பிப்ரவரி 2, 1931இல் லக்னோவில் ஒரு சமையல்காரர் குடும்பத்தில் பிறந்தவர் இம்தியாஸ். அவரது மூதாதையர்கள் கடந்த 200 வருடங்களுக்கும் மேலாக ஔத் நவாபுகளுடைய சமையலறைகளில் தலைமை சமையல்காரர்களாக பணிபுரிந்தவர்கள் ஆவர். 

பிரிட்டிஷார் காலத்தில் நவாபுகளின் எல்லைகள் ஔத்-லக்னோ இரு சமஸ்தானங்களாக பிரிக்கப்பட்ட போதும் இவர்களது குடும்பத்தார் தான் இரு நவாப் குடும்பத்தினருக்கும் சமையல்காரர்களாக நியமிக்கப்பட்டனர். 

இம்தியாஸ் சிறுவயது முதலே அதாவது ஒன்பது வயது முதலே அவரது சிறிய தகப்பனாருடன் சேர்ந்து சமையல்கலையை கற்றுக்கொண்டு வந்தார். அவரது சிறிய தகப்பனார் பிரிட்டிஷ் படையில் இருந்த 10,000 வீரர்களுக்கு உணவு சமைக்கும் பணி கொடுக்கப்பட்டிருந்தபோது இம்தியாஸும் அவருக்கு உடனிருந்து உதவியபடியே உணவுக்கலையையும் கற்றுக்கொண்டார்.

ஆரம்பத்தில் லக்னோவில் மல்யுத்தக்குழுவில் இருந்த இம்தியாஸ் பின்னர் பிரிட்டிஸ் படை வீரர்களுக்கு உணவளிக்கும் கிருஷ்ணா கேட்டரர்ஸில் பணிக்குச் சேர்ந்தார். அப்போது இவர் தயாரித்த ஔத்-லக்னோவி ஸ்டைலில் தயாரிக்கப்பட்ட ரொட்டிகள் மிகவும் பிரபலமடைந்தது.

1962இல் இந்தோ-சீனா போர் சமயத்தில் இந்திய வீரர்களுக்கு உற்சாக உரையாற்ற வந்த அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேருவிற்கும் ,இம்தியாஸ் கைகளால் தயாரிக்கப்பட்ட ரொட்டிகளும், இம்மியாஸின் சிக்னேச்சர் டிஷ்ஷான  தம் புக்த் எனப்படும்  இறைச்சி-காய்கறிகள் சேர்த்து தயாரிக்கப்பட்ட குழம்பும் அவருக்கு விருந்தளிக்கப்பட்டது. 

Legendary chef Imtiaz Qureshi, of Dum Pukht fame, dies at age 93 -  Legendary chef Imtiaz Qureshi, of Dum Pukht fame, dies at age 93 -

அதன் பிறகு அவர், உலக அளவில் பிரபலமான இந்திய தனியார்த்துறை நிறுவனமான  ஐடிசி குழுமத்துடன் இணைந்து பணியாற்றத்துவங்கினார். ஔத் நவாபுகள் விரும்பி ருசித்த உணவுகளை அவர் உணவுத்தொழிற்சாலை மூலம் பொது மக்களுக்கும் அறிமுகம் செய்தார். அவரது சொந்த தயாரிப்புகளான் தம் பிரியாணி, பலவித பருப்புகளை கொண்டு தயாரிக்கப்படும்  உஸ்பெகிஸ்தான் நாட்டு  புகாராவின் தனித்துவமிகு தால் புகாரா என்ற உணவும், கக்கோரி கபாப் மற்றும்  இறைச்சி கலந்து செய்யப்படும் ஒருவகை கிச்சடியும் அவருக்கு பெரும் மதிப்பினை உருவாக்கிக்கொடுத்தது, இந்தியாவின் முன்னணி உணவுத்தொழிற்சாலை நிறுவனங்களும் உலகம் முழுக்க  உணவகச் சங்கிலியை வைத்திருக்கும் நிறுவனங்களும் அவரை தங்களுடைய குழுமத்திற்குள் கொண்டுவர முண்டியடித்தன.

மரியாதை நிமித்தமாக அவர்களது மரியாதைக்குறிய விருந்தினர்களுக்காக அவ்வப்போது சென்று சமைத்து கொடுத்துவிட்டு வருவது வழக்கம்.

ஐடிசி தவிர அசோகா ஓட்டல்ஸ், மௌரிய ஷெரடான் ஓட்டல்ஸ், க்ளார்க் ஓட்டல் ஆகிய இடங்களிலும் சென்று தனது சமையல் வித்தையை காட்டி வந்தாலும் அவர் ஐடிசி எனும் இந்திய நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றுவதையே விரும்பினார். 

புகாரா என்றொரு உணவகத்தை தலைநகர் தில்லியில் தொடங்கினார், இப்போது அவரது ஐந்து மகன்களும் இரு மகள்களுமாய் ஏழு பேரும் உலகளவில் அந்த உணவகத்திற்கான பல கிளைகளை நடத்திக்கொண்டு வருகின்றனர்.

இந்தியாவின் பிரதமர்களான நேரு,இந்திரா,ஸாகிர் ஹுசேன் மற்றும் அடல்பிஹாரி வாஜ்பாய் ஆகியோருக்கும்  ராணி எலிசபெத், பில் கிளின்டன், டோனி பிளேர் ஆகிய வெளிநாட்டு விருந்தினருக்கும் போக பல உள்நாட்டு வெளிநாட்டு ராஜாங்க அதிகாரிகளுக்கும் இவரது உணவுகளே பிரதானமாக செய்து கொடுக்கப்படும்.

இவரது சமையல்துறை அர்ப்பணிப்புகளை பார்த்து இவருக்கு 2016இல் பத்மஸ்ரீ பட்டம் கொடுத்து கவுரவிக்கப்பட்டது. இந்தியாவிலேயே ஒரு சமையல்கலை நிபுணர் நாட்டின் நான்காவது உயரிய விருதான பத்மஸ்ரீயை பெற்றது அதுவே முதல் தடவையாகும். 

தன்னுடைய சமையலுக்கு தாம் எதையும் அளந்து நிறுத்து போடுவதில்லை என்றும் கண்ணால் காணும் அளவும் கையால் எடுக்கும் அளவுமே அவரது வெற்றியின் ரகசியம் என்றும் கூறி உலகத்தர உணவுப்பிரியர்களை புருவம் உயர்த்த வைத்தவர். 

இவருடைய சமையற்கலை பயிற்றுவிப்பில் உருவான பல மாணவர்கள் இன்று உலகத்தர உணவகங்களில் இந்த பூமிப்பந்து முழுக்க தங்களது திறமைகளை காண்பித்து மக்களின் மனதிற்குப்பிடித்த உணவுகளை தயாரித்துக்கொடுத்தும் வருகின்றனர். 

The Financial Express என்ற நாளிதழ் ஒருமுறை எடுத்த பேட்டியில் புலாவ் சிறந்ததா பிரியாணி சிறந்ததா என கேள்வியெழுப்பிய போது , "பிரியாணி என்று எதுவும் கிடையாது. அரிசியுடன் இறைச்சியை கலந்து சமைத்தாலும் காய்கறிகளை இணைத்து சமைத்தாலும் அது புலாவ் தானே தவிர பிரியாணி என்பது வெறும் பெயர் தான், மற்றபடி அந்த உணவுக்கான பெயர் புலாவ் மட்டுமே" என்றாராம்.

ஐடிசி நிறுவனத்தின் உரிமையாளர் அஜித் ஹக்ஸர் ஒருமுறை அவர் வீட்டுத் திருமணத்தை முஸ்லிம்கள் நடத்தும் வலிமா ஸ்டைலில் நடத்தித்தரும்படி கேட்டாராம். 

அப்போது முகலாய ராஜகுடும்பங்களில் நடத்தப்படுவது போன்றதான ஒரு பிரம்மாண்டமான விருந்தினையும் அதற்கேற்ற உணவுகளையும் தயாரித்து நிகழ்ச்சியினை அசத்தியுள்ளார் இம்தியாஸ். 

அதன் அடிப்படையில் இந்தியாவின் பல பிரபலங்கள் தங்களது திருமண விருந்துகளையும் வலிமா ஸ்டைலில் நடத்தித்தரும்படி கேட்க ஆரம்பித்தார்களாம். இங்கே உணவு மாத்திரமன்றி இரு மத கலாச்சாரங்களையும் இணைக்கும் விதமான விழா நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வதிலும் வல்லவராக திகழ்ந்தார் இம்தியாஸ் குரைஷி.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset