நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

காங்கிரஸின் வங்கிக் கணக்கை முடக்கியது வருமான வரித் துறை

புது டெல்லி:

வருமான வரி நிலுவை ரூ.210 கோடியை செலுத்தக் கோரி, காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகளை வருமான வரித் துறை முடக்கியது.  

மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், வருமான வரித் துறையின் இந்த நடவடிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் பொருளாளர் அஜய் மாக்கன், மக்களவைத் தேர்தல் நடைபெற்ற போது அந்த நிதியாண்டில் கட்சியின் வருமான வரிக் கணக்கு தாக்கலில் சில நாள்கள் தாமதம் ஏற்பட்டது.

இதனால், ரூ.210 கோடி நிலுவையை செலுத்தக் கோரி, வருமான வரித் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

காங்கிரஸ் இளைஞரணியின் வங்கிக் கணக்கு உள்பட 4 முக்கிய வங்கிக் கணக்குகளை வருமான வரித் துறை முடக்கியுள்ளது. அற்ப காரணங்களுக்காக காங்கிரஸின் வங்கிக் கணக்குகளை முடக்குவது கட்சியின் அனைத்து அரசியல் நடவடிக்கைகளையும் பாதிக்கும்'என்றார்.

வருமான வரி மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தில் காங்கிரஸ் தரப்பில் இதுகுறித்து முறையிடப்பட்டது.

இதையடுத்து, காங்கிரஸின் வங்கிக் கணக்குகளை விடுவித்து  தீர்ப்பாயம் உத்தரவிட்டது. வரும் புதன்கிழமை மீண்டும் வழக்கு விசாரணை நடைபெறும் வரை கணக்குகள் செயல்பட அனுமதி வழங்கியது.

காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் வெளியிட்டபதிவில், சட்டவிரோதமான தேர்தல் நிதி பத்திரங்கள் மூலம் பாஜக குவித்துள்ள ரூ.6,500 கோடியை யாராலும் தொட முடியவில்லை; ஆனால், சாதாரண தொண்டர்களிடம் இருந்து காங்கிரஸ் பெற்ற நன்கொடை முடக்கப்படுகிறது' என்று தெரிவித்துள்ளார்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset