நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

NRI, OCI இந்தியர்களிடம் அதிகரிக்கும் மோசடித் திருமணங்கள்; வெளிநாட்டு திருமணங்கள் கட்டாயம் பதியப்பட வேண்டும்: இந்திய சட்ட ஆணையம் பரிந்துரை 

புது டெல்லி: 

இந்தியர்கள், வெளிநாடு வாழ் இந்தியர்களிடையே நடைபெறும் திருமணங்கள் கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும் என்று இந்திய சட்ட ஆணையம் அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.

வெளிநாட்டு திருமணங்களில் அதிகரித்து வரும் மோசடி வழக்குகளை குறைக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஒன்றிய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வாலுக்கு சட்ட ஆணையக் குழுத் தலைவர் ஓய்வுப் பெற்ற நீதிபதி ரிது ராஜ் அவஸ்தி எழுதியுள்ள பரிந்துரை கடிதத்தில்,

வெளிநாடு வாழ் இந்தியர்கள் மற்றும் இந்திய குடிமக்கள் இடையேயான மோசடி திருமணங்கள் அதிகரித்து வருவது கவலையளிக்கும் ஒரு போக்கு.

இந்தத் திருமணங்களில் இந்திய துணைவர்கள், குறிப்பாக பெண்கள் ஆபத்தான சூழ்நிலைகளில் கைவிடப்படும் முறை அதிகரித்து வருவதை பல அறிக்கைகள் எடுத்துக்காட்டுகின்றன. ஆகையால், என்ஆர்ஐக்கள், ஓசிஐக்கள், இந்திய குடிமக்கள் இடையேயான அனைத்து திருமணங்களும் இந்தியாவில் கட்டாயமாக பதிவு செய்யப்பட வேண்டும்.

திருமண நிலையை அறிவிப்பதற்கும், பாஸ்போர்ட்டில் வாழ்க்கைத் துணைவர்களுடன் இணைப்பதற்கும், இருவரின்  பாஸ்போர்ட்டில் திருமணப் பதிவு எண்ணைக் குறிப்பிடுவதற்கும் சட்டத்தில் தேவையான திருத்தங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என்று பரிந்துரைக்கப்படுகிறது எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset