நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

ரஷிய எதிர்க்கட்சித் தலைவர் நவால்னி சிறையில் மரணம்

மாஸ்கோ:

ரஷிய அதிபர் விளாதிமீர் புதினை கடுமையாக எதிர்த்து வந்த அந்நட்டின் முக்கிய எதிர்க்கட்சித் தலைவராக கருதப்பட்ட அலெக்ஸி நவால்னி சிறையில்  உயிரிழந்தார் மரணமடைந்தார்.

47 வயதான அவருக்கு 19 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு  2021 முதல் சிறையில் அடைக்கப்பட்டார். திடீர் உடல்நலக் குறைவால் இறந்ததாக சிறைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதற்கு அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. நவால்னியின் மரணத்துக்கு புதின் தான் காரணம் என்றும் அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

ஏற்கெனவே, நச்சுத் தாக்குதலுக்குள்ளாகி மரணத்தின் அருகே  சென்று திரும்பிய அவர் தற்போது சிறையில் இறந்தது சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset