நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

சக்கர நாற்காலி அளிக்காததால் ஏர் இந்தியா பயணி உயிரிழப்பு

புது டெல்லி:

மும்பை விமானநிலையத்தில் சக்கர நாற்காலி கிடைக்காததால் விமானத்திலிருந்து இறங்கி முனையம் வரை நடந்து சென்ற 80 வயது முதிய பெண்மணி மயங்கி விழுந்து பின்னர்  உயிரிழந்தார்.

பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள இந்த விவகாரம் குறித்து 7 நாள்களில் பதிலளிக்க ஏர் இந்தியா நிறுவனத்துக்கு விமானப் போக்குவரத்து இயக்குநரகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மும்பை சர்வதேச விமான நிலையத்தில் கடந்த 12ம் தேதி நியூயார்க் நகரிலிருந்து ஏர் இந்தியா விமானத்தில் தனது மனைவியுடன் மும்பை விமான நிலையம் வந்திறங்கிய 80 வயது முதியவர், நடக்க முடியாததால் முனையம் வரைச் செல்ல சக்கர நாற்காலி வழங்குமாறு விமான ஊழியர்களிடம் கோரியுள்ளார்.

சக்கர நாற்காலி கிடைக்க தாமதம் ஆனதால், முனையம் வரை அவர் நடந்து சென்று விமான நிலைய குடியேற்ற அதிகாரிகளின் ஆவண சரிபார்ப்புக்கான வரிசையில் காத்திருந்தபோது மயங்கி விழுந்துள்ளார்.

மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதுகுறிதது ஏர் இந்தியா வெளியிட்ட அறிக்கையில், "சக்கர நாற்காலிகள் அனைத்தும் பயன்பாட்டில் இருந்ததால், சிறிது நேரம் காத்திருக்குமாறு முதியவரை விமான ஊழியர்கள் கேட்டுக்கொண்டனர். ஆனால், அவராகவே தனது மனைவியுடன் நடந்து சென்றுவிட்டார். அவர் உயரிழந்தது துரதிருஷ்டவசமானது' என்று தெரிவித்தது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset