நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

 ரூ.16,000 கோடிக்கு தேர்தல் நன்கொடை பத்திரங்கள் இதுவரை விற்பனை

புது டெல்லி:

தேர்தல் நன்கொடை பத்திரங்கள் அறிமுகம் செய்த 2018இல் இருந்து இதுவரையில் ரூ.16,000 கோடிக்கும் அதிக மதிப்பிலான பத்திரங்கள் விநியோகமாகியிருப்பதும், அதில் பெரும் பங்கு ஆளும் பாஜகவுக்கு சென்றிருப்பதும் புள்ளிவிவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.

இதுதொடர்பாக ஜனநாயக சீர்திருத்தத்துக்கான சங்கம் ADR வெளியிட்ட புள்ளி விவரத்தில்,
கடந்த நிதியாண்டு வரை அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பத்திரங்கள் மூலம் ரூ. 12,000 கோடிக்கும் மேல் நன்கொடை பெற்றுள்ளன. இதில், பாஜக மட்டும் ரூ. 6,566.11 கோடி நன்கொடை பெற்றுள்ளது.

காங்கிரஸ் கட்சி ரூ. 1,123.3 கோடியும், திரிணமூல் காங்கிரஸ் கட்சி ரூ. 1,092.98 கோடியும் இதே கால கட்டத்தில் பெற்றுள்ளன.

2018-19-ம் ஆண்டில் பாஜகவின் வருவாய் ரூ. 2,410 கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த நிதியாண்டின் ரூ.1,027 கோடி வருவாயைக் காட்டிலும் இரு மடங்காகும்.

அதுபோல, காங்கிரஸின் வருவாய் கடந்த நிதியாண்டில் ரூ. 199 கோடியாக இருந்த நிலையில், 2018-19ல் ரூ. 918ஆக உயர்ந்தது.

2021-22 நிதியாண்டில் பாஜகவுக்கு தேர்தல் பத்திரங்கள் மூலம் மட்டும் ரூ. 1,033 கோடி கிடைத்துள்ளது. காங்கிரஸுக்கு ரூ. 236 கோடி கிடைத்தது.

2022-23-ம் ஆண்டில் பாஜகவின் மொத்த வருவாய் ரூ. 2,360 கோடி. இதில், தேர்தல் பத்திரங்கள் மூலம் மட்டும் ரூ. 1,300 கோடி நன்கொடை கிடைத்துள்ளது. இந்த நிதியாண்டில் காங்கிரஸின் வருவாய் ரூ. 452 கோடி. அதில், தேர்தல் பத்திரங்கள் மூலம் ரூ. 171 கோடி கிடைத்துள்ளது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset