நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

இந்திரா காந்தி, நர்கீஸ் தத் விருதுகளின் பெயர்கள் நீக்கம்

புது டெல்லி:

தேசிய திரைப்பட விருதுகளில் இருந்து இந்திரா காந்தி, நர்கீஸ் தத் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.

தேசிய விருதுகளின் சிறந்த அறிமுக இயக்குநருக்கு முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி பெயரிலும், தேசிய ஒருமைப்பாட்டுக்கான சிறந்த திரைப்படத்துக்கு பழம்பெரும் ஹிந்தி நடிகை நர்கீஸ் தத் பெயரிலும் விருதுகள் வழங்கப்பட்டு வந்தன.

இந்நிலையில், மத்திய செய்தி மற்றும் ஒலிபரப்புத் துறை அமைத்த குழுவின் பரிந்துரைப்படி, அந்த விருதுகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

இந்திரா காந்தி பெயரில் வழங்கப்பட்டு வந்த விருது, "இயக்குநரின் சிறந்த அறிமுக திரைப்படம்' என்ற பெயரிலும், நர்கீஸ் தத்தின் பெயரில் வழங்கப்பட்டு வந்த விருது "தேசிய, சமூக மற்றும் சுற்றுச்சூழல் விழுமியங்களை ஊக்குவிக்கும் சிறந்த திரைப்படம்' என்று பெயரிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சிறந்த நடிகருக்கான தேசிய விருதின் பெயர், "முன்னணி கதாபாத்திரத்தில் நடித்த சிறந்த நடிகர்' எனவும், சிறந்த நடிக்கைக்கான தேசிய விருதின் பெயர்,  "முன்னணி கதாபாத்திரத்தில் நடித்த சிறந்த நடிகை' என்றும்  மாற்றப்பட்டுள்ளது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset