நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

தேர்தல் நன்கொடை பத்திரங்கள் மூலம் கருப்பு பணத்தை ஒழிக்க முடியாது: ரத்து செய்தது உச்சநீதிமன்றம்

புது டெல்லி:

தேர்தல் நன்கொடைகளை வங்கிப் பத்திரங்களாக அரசியல் கட்சிகள் பெறுவது அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்றும் இந்த நடைமுறையை உடனடியாக ரத்து செய்யப்படுகிறது என்றும் உச்சநீதிமன்றம் அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்தது.

தேர்தல் நடைகொடைகளைப் பெறுவதில் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தவும், கருப்புப் பணப் புழக்கத்தைத் தடுக்கவும் தேர்தல் பத்திர நடைமுறையை 2018இல் பாஜக அரசு கொண்டுவந்தது.

பாரத ஸ்டேட் வங்கிகளில் ரூ.1,000, ரூ.10,000, ரூ.1 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.1 கோடி மதிப்பில் விநியோகிக்கப்படும் தேர்தல் பத்திரங்களை வாங்கி விரும்பிய கட்சிகளுக்கு தரலாம்.

ஆனால்,  ஒன்றிய பாஜக அரசுக்கே அதிக நன்கொடைகள் கிடைத்தன. இதில் வெளிப்படைத்தன்மை இல்லை என்று எதிர்க்கட்சிகள் தொடர் குற்றச்சாட்டுகளை முன்வைத்தன.

இதுதொடர்பான வழக்கில் உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு அளித்த ஒருமித்த தீர்ப்பில்,
அரசிடம் கணக்கு கேட்கும் உரிமை நாட்டு மக்களுக்கு உள்ளது என்பதை பல தருணங்களில் நீதிமன்றங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. நன்கொடை தருவோர் குறித்த விவரங்களை தெரிவிக்கத் தேவையில்லை என்பது வாக்காளர்களின் உரிமைகளைப் பறிப்பதாகும்.  இதுபோன்று பெறப்படும் நிதி, அரசியல் கட்சிக்கு உதவியாகவோ அல்லது கையூட்டு பெற்றதாகவோ கருதப்படும்.

15 நாள்களே செல்லுபடியாகும் தேர்தல் நன்கொடைப் பத்திரங்கள், அரசியல் கட்சிகள் பணமாக மாற்றாமல் இருந்தால், அந்தத் தொகையை நன்கொடையாளருக்கு திருப்பி அளிக்க வேண்டும்.

 2019 முதல் வழங்கப்பட்ட தேர்தல் பத்திரங்களின் விவரங்களை எஸ்பிஐ வங்கி வரும் மார்ச் 6ம் தேதிக்குள் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும்.

 அதை மார்ச் 13ம் தேதிக்குள் தேர்தல் ஆணையம் இணையதளத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வெளியிட வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset