நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

ஆஸ்திரேலியாவில் வேலையின்மை விழுக்காடு ஈராண்டுகளில் புதிய உச்சம்

சிட்னி: 

இவ்வாண்டு தொடக்கத்தில் ஆஸ்திரேலியாவில் வேலையின்மை விகிதம் ஈராண்டுகால உச்சம் தொட்டது.

ஜனவரியில் அங்கு 500 வேலைகள் மட்டும் உருவாக்கப்பட்டன. 

வேலையின்மை விகிதத்தைக் குறைப்பதற்கு இந்த எண்ணிக்கை போதாது என்று வியாழக்கிழமை வெளியிடப்பட்ட அரசாங்கத் தரவில் இது தெரியவந்தது.

வேலையின்மை விகிதம் 3.9 விழுக்காட்டில் இருந்து 4.1 விழுக்காடாக உயர்ந்தது.

வியாழக்கிழமை காலை 10.55 மணி நிலவரப்படி, ஆஸ்திரேலிய டாலருக்கு எதிராக சிங்கப்பூர் வெள்ளியின் மதிப்பு 0.1 விழுக்காடு உயர்ந்தது.

ஒரு சிங்கப்பூர் டாலருக்கு நிகராக ஆஸ்திரேலிய டாலரின் மதிப்பு 1.1435 என்ற அளவை எட்டியது.

வருடாந்திர வேலை வளர்ச்சி ஜனவரியில் 2.6 விழுக்காடாகக் குறைந்தது. ஓராண்டுக்கு முன்னர் இந்த விகிதம் 3.7 விழுக்காடாக இருந்தது.

இந்நிலையில், தொழிலாளர் சந்தை மேலும் மெதுவடையும் என்று ஆஸ்திரேலிய ரிசர்வ் வங்கி எதிர்பார்க்கிறது.
 
2025 நடுப்பகுதிக்குள் வேலையின்மை விகிதம் 4.4 விழுக்காடாகும் என்று முன்னுரைக்கப்படுகிறது.

அதிகரித்துவரும் தொழிலாளர் சந்தைக்கு ஈடுகொடுக்க ஆஸ்திரேலியப் பொருளியலுக்கு மாதத்துக்கு 32,000க்கும் மேற்பட்ட வேலைகள் தேவை என்று புளூம்பெர்க் எக்கானாமிக்ஸ் பகுப்பாய்வாளர் ஜேம்ஸ் மெகிண்டியர் கணிக்கிறார்.
 

தொடர்புடைய செய்திகள்

+ - reset