நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

பிரிட்டனில் இனப் பாகுபாட்டால் இந்திய பெண் பாதிப்பு: 4.5 லட்சம் பவுண்டு இழப்பீடு வழங்க உத்தரவு

லண்டன்: 

பிரிட்டனில் இனப் பாகுபாடுக்குள்ளான இந்திய பெண் விரிவுரையாளருக்கு 4.5 லட்சம் பவுண்டு இழப்பீடு வழங்க போர்ட்ஸ்மௌத் பல்கலைக்கழகத்துக்கு அந்நாட்டில் உள்ள பணியிட குறைதீர்ப்பு தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

பிரிட்டனில் உள்ள போர்ட்ஸ்மௌத் பல்கலைக்கழகத்தில், இந்தியாவைச் சேர்ந்த காஜல் சர்மா என்பவர் ஒப்பந்த அடிப்படையில் 5 ஆண்டுகள் விரிவுரையாளராகப் பணியாற்றினார்.

அவரின் ஒப்பந்த காலம் நிறைவடைந்த நிலையில், அந்தப் பணிக்கு அவர் மீண்டும் விண்ணப்பித்தார். எனினும் அவர் விரிவுரையாளர் பணிக்கு மீண்டும் தேர்வு செய்யப்படவில்லை.

அவருடன் பணியாற்றிய அனுபவமில்லாத வெள்ளையினத்தைச் சேர்ந்தவர்கள் மீண்டும் பணியமர்த்தப்பட்டனர்.

இதன் மூலம் இன அடிப்படையில் தனக்கு எதிராகப் பாகுபாடு காட்டப்பட்டதாக பல்கலைக்கழகம் மீது அந்நாட்டின் சௌதாம்ப்டன் குறைதீர்ப்பு தீர்ப்பாயத்தில் காஜல் சர்மா முறையிட்டார்.

இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாயம், அந்தப் பல்கலைக்கழகப் பணிக்கு மீண்டும் விண்ணப்பித்த கருப்பினத்தவர்கள், சிறுபான்மையின அலுவலர்கள் மறுநியமனம் செய்யப்படவில்லை என்பது வழக்கின் மூலம் தெரிவதாகக் குறிப்பிட்டு காஜல் சர்மாவுக்கு எதிராக இனப் பாகுபாடு காட்டப்பட்டதை உறுதி செய்தது.

அவருக்கு 4.5 லட்சம் பவுண்டு இழப்பீடு வழங்க போர்ட்ஸ்மௌத் பல்கலைக்கழக்கத்துக்கு உத்தரவிட்டது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset