நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

மாநிலங்களவை தேர்தல்: ராஜஸ்தானில் சோனியா வேட்புமனு தாக்கல்

புது டெல்லி: 

மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட ராஜஸ்தானில் இருந்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.

5 முறை மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு எம்.பி.யான அவர், முதல் முறையாக மாநிலங்களவை எம்.பி. ஆகிறார்.

முன்னாள் பிரதமரும் மாநிலங்களவை எம்.பி.யுமான மன்மோகன் சிங் ஏப்ரல் மாதத்தில் ஓய்வு பெறுகிறார். அவரது இடத்துக்கு ராஜஸ்தானில் இருந்து சோனியா காந்தி தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.

33 ஆண்டுகளாக மாநிலங்களவை உறுப்பினராக நீடித்து வந்தார் மன்மோகன் சிங்.  ராஜஸ்தான் பேரவை வளாகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் சோனியா காந்தி வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

அப்போது, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, மாநில முன்னாள் முதல்வர் அசோக் கெலாட், மாநில காங்கிரஸ் தலைவர் கோவிந்த் சிங் தோதஸ்ரா, எதிர்க்கட்சித் தலைவர் திக்ரம் ஜுலி ஆகியோர் உடனிருந்தனர்.

"2019 தேர்தலிலேயே தான் போட்டியிடும் கடைசி மக்களவைத் தேர்தல் இதுதான்' என்று சோனியா காந்தி அறிவித்திருந்தார்.

அவரது பாரம்பரிய மக்களவைத் தொகுதியான உத்தர பிரதேசத்தின் ரேபரேலியில் பிரியங்கா காந்தி களமிறக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேபோல், தமிழகத்தைச் சேர்ந்த மத்திய இணை அமைச்சர் எல் முருகன் மத்திய பிரதேசத்திலிருந்தும், பாஜக தேசிய தலைவர்  ஜே.பி.நட்டா குஜராத்திலிருந்தும்,  காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் செவ்வாய்க்கிழமை இணைந்த அசோக் சவாண் மகாராஷ்டிரத்திலிருந்தும் போட்டியிடுவார்கள் என்று பாஜக அறிவித்துள்ளது.

தற்போது பதவி முடியும் 28 எம்.பி.க்களில்  4 எம்.பி.க்களுக்கு மட்டும் மீண்டும் போட்டியிட பாஜக வாய்ப்பளித்துள்ளது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset