நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் வணிகம்

By
|
பகிர்

புதிய மலேசிய மடானி வெள்ளை அரிசிக்கான காரணம் என்ன?: டத்தோ அமீர் அலி மைடின் கேள்வி

கோலாலம்பூர்:

உள்ளூர் வெள்ளை அரிசி (எஸ்எஸ்டி), இறக்குமதி செய்யப்பட்ட வெள்ளை அரிசி (எஸ்எஸ்ஐ) வகைகளை ஒழிப்பதற்கான முடிவை அரசாங்கம் விளக்க வேண்டும் என்று மைடின் பேரங்காடியின் தலைமை இயக்குநர் டத்தோ வீரா  ஹாஜி அமீர் அலி மைடின் வலியுறுத்தி உள்ளார்.

நாடு முழுவதும் இந்த இரண்டு அரிசி வகைகளை நீக்கிவிட்டு, அதற்கு பதிலாக நாடு முழுவதும் புதிய மலேசியா மடானி வெள்ளை அரிசி  வகையைக் கொண்டு வருவதற்கான நடவடிக்கையின் பின்னணியில் உள்ள காரணம் தெளிவாக இல்லை.

இறக்குமதி செய்யப்பட்ட அரிசி என்பதால் எஸ்எஸ்ஐயை அகற்றுவது அரசாங்கத்தால் இயலாது. 

இதனால் இறக்குமதி செய்யப்பட்ட வெள்ளை அரிசிக்கு என்ன நடக்கும் என்பது தான் தற்போதைய கேள்வியாகும்.

இறக்குமதி செய்யப்பட்ட வெள்ளை அரிசியின் விலையை 10 கிலோவிற்கு 40 ரிங்கிட்டில் இருந்து 30 ரிங்கிட் ஆகக் குறைப்பது சாத்தியமில்லை.

இதனால் சந்தையில் தட்டுப்பாடு ஏற்படும். ஆகையால் இது தொடர்பில் தொழில்துறைக்கு விளக்கம் தேவை என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset